பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 1.2 பெளத்த அரசர்கள் மறைந்த பின்னே பாலி மொழி மறைய வில்லையா? தமிழோ அந்நியர் ஆண்டபோதும் ஆயுள் குறையாது இன்றளவும் இயங்கும் மொழி. இந்தியாவில் உள்ள எந்த ஒரு மொழியும் வெளி நாடுகளில் அரசியல் அந்தஸ்து பெற்றிருக்கவில்லை. தமிழுக்கோ மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலிய இடங்களில் அரசு மட்டத்தில் தனி மதிப்பு இலங்கையில் தனியே தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்க அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது. அங்கே பல்லாண்டுகட்கு முன்பே பாதிரியார்கள் மருத்துவப் பள்ளியைத் (Medical School) தமிழில் நடத்தியிருக்கிறார்கள். இது மட்டுமா? இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சேறியது தமிழ் மொழிதான். சொல்லப்போனால் ஆங்கிலத்தைவிட சில வகையில் தமிழ் விஞ்சி நிற்கிறது. தமிழில் சுருக்கமாகவே சொற்களை ஆக்க முடியும். ஆங்கிலத்தில் ஒரே செயலுக்கு 0ே, Went, Gone, என்கிறார்கள். ஆனால் தமிழில் போகிறான், போனான், போயிருக்கிறான் என்று 'போ' என்னும் பகுதியோடு சேர்த்தே ஒவ்வொன்றையும் ஆக்கிக் கொள்ள முடியும். எழுத்துக்களிலும் அப்படித்தான். ஆங்கில நெடுங்கணக்கில் C, G, H, K, Q, X, ஆகிய ஆறு எழுத்துக்களிலும் 'க'கர ஒலி வருகிறது. தமிழில் ஒரே 'க' இடத்திற்குத் தகுந்தவாறு ஒலிக்கப் பாமர மக்களும் அறிவர். கிறிஸ்து (K) கடிகாரம் (G), காகம் (H), காற்று (K), குயுக்தி (Q), மெக்சிகோ (X) என்று பல எழுத்துக்களின் ஒலிகளை ஒரே 'க' தமிழில் தருவதை மொழிநூல் வல்லார் கண்டு கூறியிருக்கிறார்கள். இதனால் எல்லாம் ஆங்கிலத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஒவ்வொரு மொழியும் வெவ்வேறு தட்பவெப்ப சூழ்நிலை உள்ள நாடுகளில் உருவானது. அதனால் ஒவ்வொரு மொழியின் ஒலிகளும் எழுத்துக்களும் அவ்வாறே அமைகின்றன. அந்தந்தத் தட்பவெப்ப நிலையில் இருப்பவன் அதற்கேற்ற உணவையே உண்கிறான். அதை மாற்றி உண்ணும்போது வயிறு ஏற்றுக்கொள்வதில்லை.