பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 1.38 கடைசியில் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் சிறு பதில்... 'அண்ணாவின் திரை உரையாடல்களில் அளவுக்கு அதிகமாய் பிரச்சார நெடி அடிக்கிறதே.... ஏன்?" உண்மைதான்... அண்ணாவின் முதல் நாடகம் சந்திரோதயம். அது அப்பட்டமான பிரச்சார நாடகம்' என்று கூறி டி.கே.எஸ் சகோதரர்கள் நடிக்க மறுத்ததும் கூட உண்மைதான். குறிப்பிட்ட சில கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வலியுறுத்த நினைக்கும் எந்தக் கலைஞனின் எழுத்திலும் பிரச்சார வாடை இருக்கத்தான் செய்யும். சமுதாய சீர்திருத்தமே அண்ணாவின் அடிப்படை இலட்சியம். விஞ்ஞானயுகத்தில் வாழும் நாம் அந்த யுகத்துக்குரிய சமுதாய மாற்றத்தை வரவேற்க வேண்டாமா? 'இருபதாம் நூற்றாண்டு வாழ்க்கை வசதிகள் அவ்வளவும் ஒன்றுவிடாமல் அனுபவிக்கிறோம். சமுதாய அமைப்பு விக்கிரமாதித்தன். காலத்ததாக இருப்பது பொருந்துமா? ஆட்டுக் குட்டியை ஏற்றிச் செல்லவா ஆகாய விமானம்?’’ என்று அண்ணா ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டார். அண்ணா திரைப்பட உலகத்தில் நுழைந்த நேரம் அரசியல் விடுதலை கிடைத்த நேரம்; பொருளாதார சமூக விடுதலைக்காக மக்கள் போராடத் தொடங்கிய நேரம். சாதிக் கொடுமை, மூடநம்பிக்கை, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனம் போன்ற சீர்கேடுகள் மலிந்திருந்த நேரம், இந்தச் சீர்கேடுகளைக் களைவதே அண்ணாவின் திரைக் கதைகளின் உரையாடல்களின் நோக்கமாய் அமைந்தன. அந்த நோக்கமே அவருக்கு முக்கியம்; எந்த இலட்சிய வாதிக்கும் முக்கியம். கலையில் பிரச்சாரம் கூடாது என்பவர்கள் உண்மையில் சமூக மாற்றத்தை விரும்பாதவர்கள்; எந்த இலட்சியமும் இல்லாதவர்கள். 'மிருத்கயா' என்ற மிருணாள் சென்னில் படத்தில் கடைசிக் காட்சி. அப்படத்தில் வரும் பழங்குடி மக்கள் காலங்காலமாகப்