பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 146 கோடை வசந்தம். வசந்த கன்னிகை கிளுகிளுத்தாள். மரங்களெல்லாம் கோழிக்குஞ்சின் மெல்லிறகு போன்ற மென்தளிர்களாத் துளிர்த்தன. (சர்க்கரை- U.843) மென்மைத் தன்மைக்கும் மினுமினுப்பிற்கும் கோழிக் குஞ்சு இறகுக்கு விஞ்சியது எது? 다. உவமைகள் உண்மை நிலைக்குப் பொருந்தும் படியாய் உருவாகி வருவது படைப்பின் எதார்த்தத் தன்மைக்கு இதம் சேர்க்கிறது. அந்த வகையில் வெற்றிகரமான எடுத்துக் காட்டுகளாய் விளங்குவன கு.சின்னப்ப பாரதியின் நாவல்கள் என்று துணிந்து கூறலாம். & *