பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 13 வயிற்றுப் பிழைப்புக்காக வேற்றுமொழியை ஏற்றுக்கொள் என்று சொன்னாலும், மூளை வேற்றுமொழி மூலம் பயில்வதை விரைந்து ஏற்றுக்கொள்வதில்லை. இது இயற்கை நியதி. இதைக் காந்தியடிகள் உணர்ந்து 42 ஆண்டுகளுக்கு முன்பே தமது "யங் இந்தியா ஏட்டில் எழுதினார். அவரும் ஒரு அரசியல்வாதி தானே எனத் தள்ளிவிட முடியாது. அவர் அரசியலில் இருந்தார்; ஆனால் அவர் ஒரு கல்விமானும்கூட. ஆதாரக்கல்வித் திட்டம் என்ற ஒரு கல்வி முறையை உருவாக்கியவர் அவர். அந்த முறையில் உருவான பல அமைப்புக்கள் இன்று இந்தியாவெங்கும் பல்கலைக் கழகம் போல் வளர்ந்துள்ளன. எனவே, அவரையும் அரசியல்வாதி என்று புறக்கணிக்காமல் அவர் எழுதிய வாசகங்களை ஒருமுறை நினைவுகூர வேண்டும். 'நமது குழந்தைகளின் மூளை வேற்றுமொழி மூலம் பயில்வதால் அயர்ச்சியுற்றுவிட்டது. மனப்பாடம் செய்வதால் சுயசிந்தனை மங்கிவிட்டது. நமது நாட்டிலேயே ஓர் அந்நிய இனத்தவராக நம் குழந்தை களை இவ்வேற்றுமொழிப் பயிற்சி மாற்றிவிட்டது. நமது மொழிகளின் வளர்ச்சியைத் தடுத்துவிட்டது. எனக்கு அதிகாரம் இருக்குமானால் இன்றே இவ்வேற்றுமொழிப் பயிற்சியை நிறுத்தி மாற்றம் காண்பேன். பாடநூல்கள் வரும்வரை காத்திருக்க மாட்டேன். மாற்றம் ஏற்பட்டால் தானாக வரும். இது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய தீமை." இவ்வாறு அவர் கூறிச் சென்ற போதிலும் விடுதலை பெற்ற விரைவிலேயே அந்த மாற்றத்தைச் செய்யாதது மாபெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. கல்விமுறை குறித்து ஆராய அமைக்கப்பட்ட 'கோத்தாரிக் குழு' இதைத்தான் கூறியது. 'பாடமொழி மாற்றத்தில் செய்கிற தாமதம் பெரும் தடுமாற்றத்தில் கொண்டுபோய் விடும்.’’ என்றது. இன்று ஆங்கில நாளிதழ்கள் தேர்ந்தெடுக்கும் உரிமை” வேண்டும் என்று எழுதுகின்றன. அதாவது பொறுக்குதற்குச் சுதந்திரம் வேண்டுமாம். இதற்காநாம் சுதந்திரம் பெற்றோம்? பாரதி அன்றே பாடினான் -