பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 152 விலையேற்றத்திற்காக அவர்கள் (நிர்வாகம்) கொடுத்த டிஏ . அது பத்துப் பேரிடம் மட்டுமல்ல, வீட்டிலும் கூடச் சொல்லக் கூடாததாக இருந்தது ஒரு நல்ல பேராசிரியர் என்றெண்ணித் தம்மிடம் அன்போடு பழகியவர்களிடம் ஒரு செய்தியை மாத்திரம் மறைத்து வைத்தார் சம்பளம் எவ்வளவு என்பதை. படித்து முடித்தவுடன் தந்தை எதிர்பார்க்கிறார். திருமணம் ஆன பின் மனைவி எதிர்பார்க்கிறாள். பெற்றெடுத்த பின் பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள்? அரசிடமிருந்தோ நிர்வாகத்திடமிருந்தோ கூடுதல் சம்பளத்தை லோப்பஸ் எதிர்பார்த்தது ஆடம்பர வாழ்க்கை காக அல்ல, அன்றாடத் தேவைகளுக்காக என்பதை முண்டசேரி ஈடுபாட்டுடன் எழுத்தில் வடித்துக் காட்டுகிறார். சங்க காலத்தில் பாலை நிலத்தில் சிறிதளவு மட்டுமே உள்ள நீரை அருந்தச் சென்ற ஆண்மான் தான் பருகுவது போல் பாவனை செய்து பெண்மானை அந்தச் சிறிதளவு நீரை அருந்தும்படி செய்ததாம். பேராசிரியர் லோப்பஸ் வீட்டுக்கு மதிய உணவுக்காகச் செல்லாமல் வெறும் காபியைக் குடித்துப் பசியை அடக்கிக்கொண்டு, கொஞ்சநஞ்சம் இருக்கும் உணவைக் குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளச் செய்கிறார். சங்க இலக்கியம் காட்டும் பண்பாட்டை முண்டசேரி தன் நாவலில் புதிய பாங்கில் படைத்துக் காட்டுகிறார். 'எனக்குச் செய்யப்படாத நீதி என்னுடைய சந்தானங் (சந்ததி)களுக்காவது செய்யப்பட்டால்....? (பக். 70) என்று ஆகாயத்தைப் பார்த்து சத்தமில்லாமல் மரத்துப்போன உதடுகளால் முணுமுணுத்துக்கொண்டே பேராசிரியர் லோப்பஸ் தன் கதையை முடித்துக் கொள்கிறார். அத்துடன் நாவலும் முடிகிறது. கல்லூரிப் பேராசிரியரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட நா.பா.வின் 'பொன் விலங்கு நாவலில் காதல் அம்சத்துக்கு அளிக்கப்படும் இடம் பிரச்சனைகளுக்குத் தரப்படவில்லை என்பது இங்கே ஒப்புநோக்கத் தக்கது. கணக்கஞ்சேரி லோசன்னம் காதல் பற்றிய காட்சிகள் இருந்தாலும் அவை நாவலின் அடிப்படைப் போக்கைத் திசை திருப்பிவிடவில்லை. சுருங்கச் சொன்னால் பொன்விலங்கு போய் பேராசிரியர் ஒரு புனைவியல் நாவல் அல்ல; நல்ல நடப்பியல் (Realism) நாவல். 다.