பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 154 நுட்பமாகப் புரிந்துகொள்ள வேண்டும். உதைத்தவுடன் வானில் போகும் பந்து தான் எல்லாவற்றையும் விட உயர்ந்த நிலையில் இருப்பதாக நினைத்துக் கொண்டால் எப்படியோ அப்படித்தான்நம் அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் செய்யும் பணி உன்னத மானது என்று கூறுவதை உண்மை என்று நம்புவதும் என்று சிற்பி உணர்த்துகிறார். 'வாத்தியாரு வேலை என்ற சிற்பியின் கவிதை அனுபவப் பூர்வமான உணர்ச்சி வெளிப்பாட்டுடன் அமைந்துள்ளது. 다. ஆசிரியர் பற்றிய வேறுபட்ட பார்வையை ஐசக் அருமைராசனின் "கீறல்கள்' நாவலிலும் காண்கிறோம். இந்த நாவலில் ஆசிரியர் ஒரு துணைப் பாத்திரமே. எனினும் கதையுடன் பின்னிப் பிணைந்த பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளார். கிறித்துவ இலக்கியச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட இந்த நாவலில் உண்மையான கிறித்துவக் கோட்பாடு பொதுவுடைமைக் கோட்பாட்டுக்கு எதிரானதல்ல என்பது ஆசிரியர் வேதமணி மூலம் பேசப்படுகிறது. புன்னைக்காடு என்ற நாஞ்சில் நாட்டுக் கிராமத்தில் குசேலர் நிலையில் இருந்த முத்தையாவுக்கும் அவருடைய குடும்பத்தி னருக்கும் வேதமணி வாத்தியார் கண்ணனாக விளங்கினார். இல்லாத நிலையில் கேட்டும் கேளாமலும் அவர்தான் உதவ வேண்டியிருந்தது. அவர் ஒன்றும் செல்வந்தரல்ல. ஆசிரியர்தான். கேட்டபோதெல்லாம் கொடுப்பதற்கு நான் ஒன்றும் குபேரன் அல்ல என்று அவர் கூறவில்லை. மனம் இருந்தது. அதனால் முடிந்தவரை உதவ மார்க்கமும் தெரிந்தது. நண்பர் முத்தையா மத சம்பந்தமாகக் கொண்டிருந்த கருத்துக்கு முரணாக வேதமணி வாத்தியார் தன் கல்வியின் விளைவினால் சில புரட்சிகரமான கருத்துக்களை வெளியிடுகிறார். முத்தையா போன்றவர்களைத் திருத்தவேண்டும் என்பதற்காக, 'மதம் கிதம் என்று சொல்லித் திரிகிறோம். என்ன புண்ணியம் நல்லா வாழ முடியுதா? பின்னே மதம் எதுக்கு?.....இந்த வறுமையை எதிர்த்து மதம் என்ன