பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 155 செய்தது. மதத்தாலே வறுமையை விரட்ட முடியலேன்னா அது பேசாமெ ஒதுங்கிக்கிடனும்..... ஒதுக்கிக் கம்யூனிஸ்த்துக்காவது வழி விடனும்... என்று கூறும் வேதமணி வாத்தியார். ரஷ்யா கம்யூனிஸ்ட் நாடாயிருப்பதனால் கிறிஸ்தவர் களுக்குப் பகை நாடாகிவிடாது. எல்லாநாடும் கிறிஸ்தவர் களுக்கு நட்பு நாடுகள்தான். கிறிஸ்துவுக்குயார்பகைவர்: என்று உலக நடப்புப் பற்றிய முற்போக்குக் கருத்துக்களைப் பரப்புபவராகவும் படைக்கப்பட்டிருக்கிறார். ஆசிரியர்கள் உயர்ந்த பண்புக்கு உறைவிடமானவர்கள் என்பதையும் நட்புக்கு இலக்கணமானவர்கள் என்பதையும் வேதமணி வாத்தியார் மூலம் அருமைராசன் புலப்படுத்துகிறார். பாரி இறந்த பின்கபிலர், அவ்வை போன்ற புலவர்கள் பாரிமகளிர் திருமணம் நடைபெற முயற்சிகள் எடுத்துக் கொண்டதுபோல் முத்தையாவின் பெண்கள் திருமணத்திற்கு வேதமணி வாத்தியார் முயற்சி எடுக்கிறார். முத்தையா வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டபோது வெகுண்டெழவில்லை. போராடவில்லை. ஆனால் அவருக்காக வேதமணி வாத்தியார் போராடுகிறார். சிறைக்குப் போகிறார். சுயநலவாதிகளும் மோசடிக்காரர்களும் நிறைந்த ஒரு சின்ன கிராமத்தில் வாழ்வுக்கு வழிகாட்ட ஊருக்கு உதவ ஒரு ஆசிரியர்தான் பொருத்தமானவர் என்று எழுத்தாளர் அருமைராசனின் பார்வையில் பட்டிருப்பது பாராட்டுக்குரியது. பல ஆசிரியர்கள் கிராமங்களில் கிராம மக்களோடு ஐக்கியமாகி அவர்களுக்குFriend, Philosopher and Guide என்பதுபோல நண்பராகவும் சான்றோராகவும் வழிகாட்டி யாகவும் விளங்கி வந்துள்ளார்கள். கோமல் சுவாமிநாதனின் மேடை நாடகமான தண்ணீர் தண்ணீரில் வரும் வாத்தியார் வைத்தியலிங்கம் அப்படிப்பட்ட பாத்திரமாக வார்க்கப்பட்டுள்ளார். அவர் சுத்திப்பட்டி கிராமத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, அந்த ஊரில் உள்ள அனைவருக்குமே ஆசானாக விளங்குகிறார்; பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பெரும் பங்கு எடுத்துக் கொள்கிறார்.