பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 16 ஆனால் ஆங்கிலம் தெரிந்த ஒரு ஜப்பானியர் ஆங்கில வார்த்தைகளை அவர்கள் முறையிலேயே உச்சரிக்கின்றனர். இவ்வா றெல்லாம் 'ஆனந்தவிகடன் ஏட்டில் ஒர் 'இதயம் பேசுகிறது. ஆனந்தவிகடன் ஆங்கில ஆதரவுக் கொள்கை ஏடு என்பது தெரிந்ததே. உலகில் இன்று பல வழிகளில் முன்னேறியுள்ள ஜப்பான் தமிழில் இருக்கும் அளவுக்கு பண்டை இலக்கியச் செல்வம் பெற்ற மொழியல்ல. சிக்கலான எழுத்துக்களைக் கொண்ட மொழி. அவர்கள் அந்த மொழியைப் பாடமொழியாகக் கொண்டிருக்கும் போது தமிழ் பாடமொழி ஆக இயலாது என்பது தமிழின் இயலாமையா? அல்லது தமிழரின் இயலாமையா? ஜப்பானைச் சொன்னால் அது ஒரு மொழி பேசும் நாடு; ஆங்கிலம் அங்கே அடிநாளிலேயே ஒழிக்கப்பட்டுவிட்டது என்பர். ஸ்வீடன், பின்லாந்து இப்படிப்பட்ட நாடுகளில் தாய்மொழி தானே பயிற்று மொழி என்றால், உடனே 'அவர்கள் என்ன நம்மைப்போலவா...? அவர்கள் இரண்டு மூன்று மொழிகள் அதிகமாகப் படித்து அறிவைப் பெருக்கிக் கொள்பவர்கள் ஆயிற்றே" என்கின்றனர். அங்கே தாய்மொழி தவிர, ஆங்கிலம் முதலிய பல மொழிகளில் கற்கின்றனர் என்றால் அந்த மொழிகள் எல்லாம் ஒரே எழுத்துக் கொண்டவை. மொழி கற்கின்ற சுமை அங்கே குறைவாகவே உள்ளது! அவர்கள் மொழிகளுக்கும் ஆங்கிலத்துக்கும் பல அடிப்படை ஒற்றுமைகள் உள்ளன. ஆனால், தமிழும் ஆங்கிலமும் வேறுபட்ட மொழிகள். ஆங்கிலமே பாடமொழி என்னும்போது குறிப்பிட்ட பாடத்தைக் கற்பதில் உள்ள கவனம் அதை எந்த மொழியில் கற்கிறோமோ அந்த மொழியைச் சரியாக இலக்கணப் பிழையின்றி எழுதினோமா, அதனால் மதிப்பெண்கள் குறைந்துவிடாதே" என்ற முறையில் செல்கிறது. இது தேவைதானா? என் குடும்பத்திலேயே சென்ற ஆண்டு இருவர் தமிழ்நாடு அரசாங்க அலுவலர் தேர்வுக்காகத் தேர்வு எழுதினர். ஒருவன் தமிழ்வழி பி. ஏ. பட்டப் படிப்புப் பயின்றவன்; இன்னொருவன் ஆங்கிலம் மூலம் அதே பி.ஏ. பயின்றவன். இருவரும் எடுத்துக் கொண்ட விருப்பப் பாடம் ஒரே பொருளாதாரம்தான்.