பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 17 அவர்களுள் தமிழ் மூலம் பயின்றவனுக்கு வேலை கிடைத்து விட்டது. ஆனால் ஆங்கில வழி பயின்றவன் தேறவில்லை என்ற செய்தி வந்து சேர்ந்தது. தமிழ்வழி பயின்றவனுக்கு முன்னுரிமை தரப்பட்டதாகச் சொல்லமுடியாது. ஏனெனில் அவன் எழுதியது பள்ளி இறுதி வகுப்புத் தகுதியை மட்டும் காட்டியே. இதிலிருந்து தமிழ் மூலம் பயில்கிறவர்கள் எளிதில் புரிந்து கொண்டு... தேர்வில் வெற்றிபெற முடிகிறது என்று தெரிய வில்லையா? புரிந்த மொழியில் எழுத வேண்டும் என்பதற்காகப் பல மொழிகள் கற்ற மேதைகள் கூடத் தம் தாய்மொழியிலேயே தமது இலக்கியங்களைப் படைத்தனர். காரல் மார்க்ஸ் ஜெர்மனியில் தான் தமது மூலதன நூலை எழுதினார். தியாகராச சுவாமிகள் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்திருந்த போதிலும் தமது இசைப் பாடல்களைத் தமது தாய்மொழியான தெலுங்கில்தான் இயற்றினார். வங்கப் பெருங்கவிஞர் தாகூர் ஆங்கிலம் அறிந்தவரே. தமது பாடல்களை ஆங்கிலத்தில் நேரடியாக எழுதியிருந்தால் உடனே உலகப் புகழ் எய்திருக்கலாம். ஆனால், அவர்தமது 'கீதாஞ்சலி'யைத் தாய் மொழியான வங்கத்தில்தான் தந்தார். பின்னர்தான் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டது. அவருக்கு உலகப் புகழ் கிடைக் காமலா போயிற்று? நோபல் பரிசு அல்லவா கிடைத்தது! தாய்மொழி மூலமே தமது இலக்கியத்தைப் படைத்த ரவீந்திரர் ' தெரியாத மொழியில் இசையை அனுபவிக்க எண்ணுவது மனைவியோடு வக்கீல் வைத்துப் பேசுவதுபோல' என்கிறார். ஆங்கிலத்தைத் தமது தாய் மொழியோடு இணைத்துப் பாட மொழியாகப் படித்தால் தமிழ் முன்னேறும் என்பது ஒரு வாதம். பழமொழி சொல்வார்கள், 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்று. அது இரக்கத்திற்கு, இதய விசாலத்திற்கு விளக்கமாக இருக்கலாம். ஆனால், மொழி வளர்ச்சிக்கு அது முட்டுக்கட்டை யாகவே முடியும்.