பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 18 அலை ஒய்ந்து கடலில் குளிக்க முடியுமா? நமது மாநிலத்தில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியிலிருந்து சில துறைகளில் அகற்றும் போது எவ்வளவு எதிர்ப்பு உள்ளுர இருந்தது. அலுவலர்கள் முணங்கியதுண்டு. மொழிபெயர்ப்பில் பல இடர்கள் மோதின. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில்கூட இது பற்றி திருமதி. மகேஸ்வரி பாலகிருஷ்ணன் எனும் இலங்கை நிதித்துறையை, சேர்ந்த உறுப்பினர் பேசினார். எடுத்துக்காட்டாக, 'குழு என்றே Committee என்பதற்கும்.Board என்பதற்கும் மொழிபெயர்க்கிறோம். இதெல்லாம் சரியா?" என்று ஐயம் தெரிவித்தார். அதன் பின்னர் தமிழ் பல துறைகளில் தமிழ்நாட்டில் ஆட்சி மொழி ஆனது. போர்டு என்பதற்கு வாரியம் என்ற புதிய சொல் கண்டறியப்பட்டது. வாரியம், சோழர் காலக் கல்வெட்டுக்கள் தந்த நல்ல சொல். தயங்காது தமிழை ஆட்சிமொழியாக்கியதால் அல்லவா இப்படிப் புதிய சொற்களை கண்டறிய முடிந்தது? தமிழ்நாட்டு அரசு அலுவல்மொழி தமிழ் என்று ஆகிவிட்டது. ஆண்டுதோறும் தமிழ்நாடு வேலைவாய்ப்புக் குழுத் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, படித்து வெளி வருவோரில் பெரும் பகுதியினர் மாநில அரசு வேலைகளையே நாடி வருகிறார்கள் என்பது தெளிவு. இந்த மாநில வேலைக்குத் தமிழ் வழியே படித்தால் போதாதா? வெளி மாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும் செல்வோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அவர்களுக்கு மொழிப் பாடமாக நீடிக்கும் ஆங்கிலம் போதாதா? இதையெல்லாம் நிதானமாகவும் நியாயமாகவும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்க வேறு வழி பார்க்க வேண்டும். இதை விட்டுவிட்டுத் தமிழ்ப் பயிற்றுமொழியைக் காரணம் காட்டுவது பொருந்தாது. இந்தப் பயிற்சி மொழிச் சிக்கல் பச்சைத் தமிழர் என்று பாராட்டப் பட்டவர்களையெல்லாம் பச்சோந்தித் தமிழர் ஆக்கிவிட்டதே! 'தமிழர் வாழ்ந்தால் அல்லவா தமிழ் வாழும்; தமிழ் மாணவர் வாழ்வைப் பலியிட்டா தமிழ் வளர்ச்சி2 என்பது பொருளற்ற வாதம்! []