பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 19 (3) இந்தியர் வாழ்ந்தால் அல்லவா இந்தியா வாழும் என்றால்... இந்தியப் பெருநாட்டிற்கு வீர சுதந்திரம் வேண்டிப் போரிட்ட போது வெள்ளையன் பலமுறை சுட்டுத் தள்ளினான். இந்தியர் பலர் இரத்தம் சிந்தினர்; தேனான உயிரை விட்டுச் செத்தனர். உடனே 'இந்தியர் வாழ்ந்தால் அல்லவா இந்தியா வாழும்?' என்று ஏன் விடுதலைப் போரை நிறுத்தவில்லை, நெஞ்சில் உறுதியும் நேர்மைத் திறமும் உடையவர்கள்! ஒர் ஆங்கிலேயனை 'எதை இழக்கச் சம்மதிப்பாய் இங்கிலாந்தையா, அல்லது சேக்ஸ்பியரையா? எனக் கேட்டால், 'இங்கிலாந்தை இழந்தாலும் கவலையில்லை; ஷேக்ஸ்பியரை இழக்க ஒருபோதும் இசையேன், ' என்பான். ஷேக்ஸ்பியர், அவர்களது மொழிப் பெருமையின் சின்னம் ஆங்கில மொழி வாழ்ந்தால்தான் ஆங்கிலேயன் வாழ்வான் என்று எண்ணுவோர், ஆங்கிலேயர். ஆனால், இங்கோ தமிழர் வாழ்ந்தால்தான் தமிழ் வாழும் என்ற குரல் ஒலிக்கிறது. சில ஓட்டைச் செவிகள் அதையும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. 마 'இந்து ஏட்டுக்கும் - 'தினமணி' ஏட்டுக்கும் தமிழை - தமிழரை எதிர்ப்பதுதான் கொள்கையோ? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழ் மறவர்களோடு சில ஆங்கில ஆதரவாளர்களும் தோளோடு தோள் நின்று உதவினார்கள். அவர்கள் இன்று தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தைத் தமிழ்த் திணிப்பு என்கின்றனர். "இதற்கா நாங்கள் இந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்தோம்?' என்கின்றனர்.