பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 22 தமிழைப் பற்றுமொழி ஆக்குவது திருமணம் செய்தால் பைத்தியம் நீங்கும் என்ற வைத்தியமுறை அல்ல. தமிழ் ஏற்கனவே ஏனைய இந்திய மொழிகளைவிட வளர்ந்துள்ள மொழி; ஆட்சித் துறைகளில் ஒரளவு வெற்றிகரமாக இயங்கி வரும் மொழி. ஆங்கிலம் இருந்தபோது பூரீ என்று போட்டு அதற்கு ஆங்கிலத்தில் மூன்று எழுத்துக்களைப் பயன்படுத்த நேர்ந்தது. இன்று திரு. என்னும் இரண்டு எழுத்துக்கள் போதும் - நீதி மன்றங்களில் வாக்கு மூலங்கள் தமிழில் பதிவாகின்றன. வழக்குரைஞர்களுக்கு வேண்டுமானால் தாய்மொழியில் வாதிடுவதால் வருமானம் குறையுமோ என்ற கவலை ஏற்படலாம். அது போல் தமிழில் பயிற்றுவித்தால் எல்லாம் தெரிந்துகொண்டு மாணவர்கள் துருவித் துருவிக் கேட்பார்களே என்று கல்லூரி அறிவியல் பாட ஆசிரியர்கள் தயங்குகிறார்களோ என்ற எண்ணம் பொதுமக்களிடம் உள்ளது. அந்த எண்ணம் நீக்கப்பட்டாக வேண்டும். 다. ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஆங்கிலப் படுதா பில்கணிய நாடகத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் ஒரு படுதா தொங்கவிடப்படுகிறது; ஒருவரை ஒருவர் தெரியா திருக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது - அரசன் ஆணையால்! இன்று ஆங்கில ஆசிரியர் செயலால் - ஆசிரியருக்கும் மாணவர் களுக்கும் இடையில் உள்ள இந்தப் படுதாவில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்துவிட்டு 'மூளையில் படுதா' என்று மாணவரைக் கேட்க வேண்டியிருக்கிறது. 'மீடியம்' என்றால் ஊடுருவக் கூடியது என்று பொருள். ஆங்கிலம், ம்ாணவர் மூளைக்குள் ஊடுருவ முடியாத வேற்றுமொழி என்பதால் மாற்றம் வேண்டப்படுகிறது. படிப்பில்லாத பாமர உழவன் தன் பிழைப்புக்கே துணை நிற்கும் துண்டு நிலத்தில்கூட புதிய சோதனைகளைச் செய்யத் தயாராகி விடுகிறான். 'ஐ. ஆர். எட்டா? கருனவா? எதுவானாலும் போட்டுப் பார்ப்போம்?' என்று துணிந்து செயல்படுகிறான். ஆனால் படித்த