பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 24 மொழியாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழக மட்டத்திலும் தாய்மொழிதான் பயிற்றுமொழியாக வேண்டும் என்றும் அதுதான் தம் நெடுநாள் நம்பிக்கை என்றும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் "ஆங்கிலத்திற்கு நாம் கொடுக்கும் சிறப்பு அறிவியல் பாட அறிவை மறைக்கின்ற கிரகணம்போல் விளங்கக்கூடாது; அறிவியல் பாடங்களின் மூலமாக ஆங்கிலத்தைக் கற்பிப்பதுதான் தற்சமயம் நடக்கிறது. ஆங்கிலத்தை மொழியாகக் கற்றுக்கொள்வது நடைபெற வில்லை; இது வேறு என்பதை நாம் உணரவில்லை' என்றும் எழுதியுள்ளார். இன்னும் ஒரு படி மேலே சென்று 'பிரிட்டனில் லத்தீன், கிரேக்கம் முதலிய மொழிகள்கூட அந்தந்த மொழிகளில் கற்பிக்கப் படவில்ைைல; ஆங்கிலத்திலேயே தாய்மொழி மூலமே கற்பிக்கப் படுகின்றன” என்று ராஜாஜி ஆதாரம் காட்டுகிறார். ஒரு ரூபாய் விலையில் கல்கி காரியாலயத்தினர் வெளியிட்டுள்ள ராஜாஜியின் இந்த நூல் தமிழ்ப் பயிற்று மொழி ஆதரவாளர்களுக்கு ஒரு நல்ல போர்வாள். அந்தப் போர்வாள் தந்தவர்தான் இன்று புறங்காட்டுகிறார். என்ன செய்வது? ராஜாஜிதான் இப்படிச்செய்கிறார். இதற்கு நாம் என்ன சொல்வது? அவர் மொழியில்தான் சொல்லவேண்டும்: 'இந்த தேசத்தைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!" qళ్మితీ நன்றி: முரசொலி 6-I-71 7- H -7| 8-1-7}