பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 30 - அகலிகை கதையின் பிறப்பிடமான இராமாயணம் கம்பன் கைபட்ட பின் தமிழகத்தில் பரவலாயிற்று, அதற்கு முன் அதன் குறிப்புக்கள் ஆங்காங்கே தென்படினும். கம்பராமயணத்தின் அடிநாதமாக விளங்குவது பிறன் மனை நோக்காத பேராண்மை. அதை மீறத்துணிந்த இராவணன் இறுதியில் இறக்கிறான். இது ஆடவர் ஒழுக்கம் சம்பந்தப்பட்டதே. இதற்கு முன் இப்படிப்பட்ட கருத்தோட்டமுள்ள கதையின் வேர் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கு மறைந்து கிடக்கிறது? சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளாகச் சொன்ன குறித் கோள்கள் தவிர அக்கதையில் வேறு கருத்தோட்டம் இல்லையா சிலப்பதிகாரமும் ஆடவர் ஒழுக்க சம்பந்தப்பட்ட ஒரு நூல்தான். கண்ணகியின் கற்பைக் காலங்காலத்துக்கும் பறைசாற்றுவதற்காக எழுந்த காப்பியமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. சங்ககாலத்திலும் அதன் பின்னரும்கூட பரத்தையர் இருக்கவே செய்தனர். பழந்தமிழகத்தில் நிலைமை இவ்வாறிருக்க, ஆடவர் ஒழுக்கம் பற்றிய பேச்சிற்கே இடமில்லையே எனலாம். பழந்தமிழகத்தில் பரத்தையர் சேரிகூட இருந்தது; மறைக்க வேண்டியதில்லை. திருட்டு இருந்திருக்கிறது என்பதனாலேயே சமூகத்தில் திருடர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது என்றா பொருள்? சிலப்பதிகாரத்தில் பரத்தை வயிற் சென்ற ஆடவன் பற்றிய தீர்ப்பு எப்படி அமைந்துள்ளது என்பதைப் பலரும் பார்க்கத் தவறியுள்ளனர். ஆடல் மகள் வீட்டிற்குச் சென்ற கணவன் திருந்தி திரும்பி வந்ததும் கண்ணகி ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் சமூகம் ஏற்றுக்கொள்கிறதா? புகாரிலும் அவன் நடமாட முடியவில்லை. மதுரை சென்று மரணத்தைத் தழுவ நேர்கிறது. சம்பவ அமைப்பின் பின்னணி என்ன? திருந்திய கோவலனை சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஆடல் பெண்ணை விரும்பி மனைவியல்லாத அந்நியப் பெண் இல்லம் சென்ற கோவலன் திருந்திவிட்டேன் என்று சொன்ன உடனே ஏற்றுக்கொள்வது என்ன அவ்வளவு எளிதான செயலா? இதே செயலைக் கண்ணகி செய்திருந்து அவள் திருந்தி கோவலனிடம் வந்தால் ஏற்றுக்கொண்டிருப்பானா என்ற நியாயமான வினா. இளங்கோ அடிகள் உள்ளத்தில் எழுந்திருக்கக் கூடும். கோவலனுக்கு அவர் கொடுத்துள்ள முடிவிலிருந்து இது தெரிகிறது. மற்ற ஆடவரைப்போல குடும்பஸ்தனாக இருந்தால் அவரும் கண்ணகி ஏற்றுக்கொண்டது, சரிதான் அந்த மட்டோடு, ஆளாவது வந்து சேர்ந்தானே என்று ஆறுதல் அடைவதுதானே