பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 35 தெரிவதில்லையல்லவா? அதுபோல மரத்தின் பொலிவிற்கும் வலுவிற்கும் அடிப்படையான வேர்கள் கண்ணுக்குத் தெரிவ இல்லை. கண்ணுக்குத் தெரியாத வேர்களைத் தேடும் சாதனையை நிகழ்த்துவது, அதுவும் இலக்கியத்தின் பழந்தமிழ் இலக்கியத்தின் வேர்களைத் தேடுவது என்பது வேரிற்பழுத்த பலாவை வெட்டி எடுத்து அதன் சுளையை விண்டு சுவைக்கும் செயலாகக் கருதலாம். பழந்தமிழ் இலக்கியம் என்று எதைச் சொல்லலாம் என்பதை முதலில் குறிப்பிட்டேயாகவேண்டும். பொதுவாகத் தமிழ் இலக்கியத்தின் பழைய காலத்தை சங்க இலக்கியம் - கி.மு.500 முதல் கி.பி.200 வரை நீதி இலக்கியம் கி.பி.100-500 திருக்குறள் சிலம்பு மணிமேகலை முத்தொள்ளாயிரம், கார் நாற்பது உள்பட என்று குறிப்பிடுவர்; மேற்கண்டவற்றுள், மிகப் பழமையானதாக சங்க இலக்கியத்தி னையும் தொல்காப்பியத்தையும் காண்கிறோம். அதன் வேர்களைக் கண்டுவிட்டால் பழந்தமிழ் இலக்கியத்தின் வேர்களைக் கண்டு விடலாம். பழந்தமிழ் இலக்கியத்தின் வேர்களாக விளங்கி வந்தவை இன்ன வகைப் பாடல்கள் என்று சொன்னதும், இவர் கண்டது வேர்களை யல்ல. கிளைகளையோ - என ஐயுறத் தோன்றும். அப்படிப்பட்ட வண்ணமிகு பாடல்களைத் தந்த இலக்கியத்தை எப்படி மண்ணும் தூசியும் ஒட்டிய வேர்கள் என்று கூறத் தோன்றும் இலையும் பூவும் கனியும் காயும் குலுங்கும் கிளைகளாகத்தானே கருதத் தோன்றும். ஆனால் உள்ளபடியே பழந்தமிழிலக்கியத்தின் வேர்கள் நாம் எதிர்பார்த்திடாத இடத்தில் புதைந்து கிடக்கின்றன. தங்கமும் வைரமும் இரும்புத் தாதும் பூமிக்கடியில் புதைந்துகிடப்பதுபோல பழந்தமிழ் இலக்கியத்தின் வேர்கள் ஏட்டிலும் எழுத்திலும் வாசம் புரியவில்லை. இவற்றுக்கு அப்பால் அவற்றின் இருப்பிடம் இருந்தது. அதனால் தான் அந்த வேர்களை நீங்கள் ஏடுகளில் எங்கு தேடினாலும் அகப்படப் போவதில்லை என்று குறிப்பிட விரும்புகிறேன். ஏடுகளில் தேடிப் பார்த்துத் தென்படாததை எங்கு தேடுவது என்று மருகியபோது, எனக்கு முன்னே தேடியவர்களின் பாதச் சுவடுகள்