பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 39 வாய்மொழிப் பாடல் மரபில் வந்த சங்க இலக்கியத்தின் அகப்பாடல்களில் இயற்கை வர்ணங்கள் ஏராளமாக உண்டு. ஆனால் அவை ஒவியனின் திரைச்சீலையில் தீட்டப்படும் முழு இயற்கைக் காட்சி (Landscape) ஆக இல்லாமல் காதலர் சந்திப்பின் பின்புலமாகவே விவரிக்கப்படுகின்றன, கி.ராஜநாராயணின் கடிதங்களில் கிராமத்து விவசாய நிலைமை பற்றி விவரிக்கப் படுவதுபோல. அகப்பாடலில் இடம்பெறும் களவு மணம் என்பதெல்லாம் தமிழன் இயற்கையோடு இணைந்து வாழ்வு நடத்திய மிகப் பழைய காலத்திய நடப்பு ஆகும். இன்றைக்கு அது இந்தியத் தண்டனைச் சட்டப்படி ஒரு குற்றமாகும். ஆனால் மார்கன் (Morgan) ஆய்வு செய்த செவ்விந்திய மக்களிடையே காதலி காதலனோடு உடன்பட்டு பெற்றோருக்குத் தெரியாமல் சென்றுவிடுவது களவு எனக் கருதப்படுவதாக அதனை ஆங்கிலத்திலான Stealing எனும் சொல்லாமல் குறிப்பிடுகின்றனர் என்று அறிகிறோம். இயற்கை யோடியைந்து வாழ்க்கை நடத்திய தொடக்க காலத்துத் தமிழனின் பண்பான உடன் போக்கு' வாய்மொழிப் பாடல்களில் இடம்பெற்றுப் பின்னர் சங்கப்பாடல்களாகப் பாடப்பெற்றிருக்க வேண்டும். அந்தப் பாடல்கள் மக்கள் பாடல்களாய் அமைந்ததால் அவை மக்கள் நலனே தலையாயதெனக் கருதின. நெல்லை முறைப்படி அரிசியாக்கித் தந்தால் யானைக்குக் கூட பலநாள் உணவாகும். யானையே வயலுக்குள் போனால் மிதிபடுவதே மிகுதி. அதுபோல முறையற்ற வரி ஆகும் என நயமாய்ப் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடைநம்பிக்குக் கூறுகிறார். அரசன் தான் நாட்டின் உயிர் எனக் கூறிய மோசி கீரனாரால் 'மக்கள் தான் உடல்' என உணர்த்தப்பட்டது. உயிர் உடலுக்குத் தீங்கு செய்யலாமா? கூடாது என்பதே மக்கள் நலன் நாடிய கவிஞர் கருதுகோள். இதன் தொடர்ச்சியாக திருக்குறளிலும் அரசனுக்கு வெற்றி தருவது வேல் அன்று; கோணாத செங்கோல் "(ஆரியப்படை கடந்து வெற்றி பெற்ற நெடுஞ் செழியனின் கோணிய செங்கோல் அவன் உயிரைப் பறித்தது சிலம்பு தரும் சீரிய பாடம்)