பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 40 அடாவடி வரி வசூல் வழிப் பறிக்கொள்ளைக்காரன் செயலாகக் கண்டிக்கப்படுகிறது, குறளில். சங்க மருவிய காலத்தில் சங்கப் பாடல்களின் மரபில் வந்ததால், தமிழில் எழுந்த முதற் காப்பியமான சிலப்பதிகாரத்திலேயே ஒரு அரசனை அரசியை தலைமக்களாகக் கொள்ளாமல், குடிகளுள் ஒருவனான ஒரு வணிகன் மகனையும் அதைத் தொடர்ந்து மணிமேகலையில் சமூகமதிப்பில் குறைவாக அன்று கருதப்பட்ட கணிகையர் குலத்தில் தோன்றிய மணிமேகலையையும் தலை மகளாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. வடமொழி நாடகங்களில் (காளிதாசன் போன்றோர் நாடகங்கள்) ஆங்கில நாடகங்களில் (சேக்ஸ்பியரின் பல நாடகங்கள்) அரசனைக் கதாநாயகனாகக் கொண்டு காப்பியம் எழுதியதைப் போன்ற மரபு தமிழில் இருந்து, பின்னர் குடிமக்களை தலைமக்களாகப் பாடும் மரபு பரிணாமம் பெற்று சிலம்பிலும் மணிமேகலையிலும் இடம் பெறவில்லை. தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத் திலேயே அரசனை ஒதுக்கிவிட்டு ஒரு குடிமகனை நாயகனாக்கும் பக்குவப்பட்ட மனம் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவடி களுக்கு எப்படி வந்தது? சங்கம் மருவிய காலம் வரை சங்கப் பாடல் களின் மரபான வாய்மொழிப் பாடல்களின் உயிரின் ஒட்டம் இருந்துகொண்டே இருந்தது. அந்தப் பண்பே சிலப்பதிகாரத்தில் பிரதிபலித்தது. திருவிழாவில் காணாமற் தொலைத்துவிட்ட பிள்ளையைக் கண்டுகொண்ட தாய் போல வாய்மொழிப் பாடல்களான நாட்டுப் பாடல்களுக்கு தமிழகம் வரவேற்பு தருகிறது என்றால் அதற்குக் காரணம் தமிழின் வேர், உயிர் அங்கேதான் இருக்கிறது என்பதால்தான். இதற்கான முயற்சிகளை, வேர்களைத் தேடும் பணியினை பல ஆய்வாளர் செய்துள்ளனர். சார்லஸ் கோவர் (Gover Charlese) 1871 இல் இந்தியாவில் நாட்டுப் புறப்பாடல்களை தொகுத்து வழிகாட்டினார். மு. அருணாசலம் அன்னகாமு, நா. வானமாமலை, கி.வா.ஜ. பெ.துரன், அரவிந்தன், ஆறு.அழகப்பன், மு. வை. அரவிந்தன் தமிழண்ணல் போன்ற பல அறிஞர்கள் வேர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டோராவர். கலைமகள், தாமரை, செம்மலர் போன்ற இதழ்களும் திருச்சி வானொலியும் இப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளன.