பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 42 செல்வச் செழிப்பை, வாணிபப் பெருக்கை அறியவும் உதவுகிறது. ஆக இந்தப்பாடல் ஒரு வரலாற்று வழி வந்த பழக்கத்தை மரபைப் பிரதிபலிக்கிறது. இதுபோல சங்கப் பாடல்கள் வாய்மொழிப் பாடல்களின் மரபைப் பிரதிபலித்தன என்றால் மிகையாகாது. வடக்கே அசோகன் ஆண்ட காலத்திலிருந்துதான் எழுத்து வடிவம் தோன்றியதாக ஆய்வாளர் கூறுகின்றனர். தெளிவான எழுத்து வடிவங்கள் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியங்கள் உருவாகிவிட்டன. அவை வாய்வழியே வாழ்ந்து வந்தன. எப்படி அச்சுக்கலை வந்ததும் அப்படியே எழுதப்பட்ட இலக்கியங்கள் அச்சுவாகனம் ஏறியதுபோல, அவை எழுத்து வடிவம் வந்ததும் ஏட்டில் எழுதப்பட்டு விடவில்லை. காரணம், வாய்மொழிப் பாடல்கள் வாய்க்கு வாய் வேறுபடும். பல நூறு ஆண்டுகளில் நினைத்தவை எத்தனையோ? எனவே அவற்றின் மரபு மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டு, சங்ககாலச் செய்யுள் நியதிப்படி பாடி உயிர்ப்பிக்கப்பட்டன. வேருக்குச்சங்கப் புலவர்கள் நீர் வார்த்தார்கள். அதனால்தான் இன்றைக்கும் நாம் அந்த வேர்களைத் தேடிக் கண்டறிய முடிகிறது. o