பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 4 போர்க் காலத்தில் பொய், ஆயிரம் ஸ்கட் ஏவுகணைகளை விட வலிமை வாய்ந்ததால் விசுவரூபமெடுத்து நிற்கிறது. இன்,ை வளைகுடாப் போராகட்டும், வல்லரசுகள் இணைந்து நின்ற அன்றைய இரண்டாம் உலகப் போராகட்டும், எதிரிக்கு இவ்வளவு சேதம் இழப்பு என்று போட்டி போட்டுப் புள்ளி விவரம் என், போர்வையில் அது புகுந்து விளையாடும். போர்ப் பிரச்சாரம் என்ற பெயரில் பொய்ப்பிரச்சாரம் செய்ய ஆகாயப் புளுகன் கோயபல்லை ஓர் அமைச்சன் ஆக்கினானே இட்லர், அவன் எவ்வளவு பெரிய கெட்டிக்காரன்! நாட்டுக்காக, வீட்டுக்காக, பதவிக்காக பணத்துக்காக பொம் சொல்லலாம், பாதகமில்லை என்று சில நேரங்களில் சில மனிதர்கள் சமாதானம் சொல்கிறார்கள் 'புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில் பொய்மையும் வாய்மை யிடத்து என்ற வள்ளுவர் வாக்குக்கு முதல் மரியாதை வழங்கு கிறவர்கள். போகிற போக்கைப் பார்த்தால், பொய் ஒரு குற்றமல்ல, குணம் என்று கொண்டாடப்படலாம். கல்யாணம் என்றால் ஆயிரம் பொய் சொல்லாமல் நடத்தக் கூடாது; நடத்தினால் செல்லாது என்ற சட்டமே கூட வரலாம். சதாம் உசேன் காலத்தில் இந்தச் சங்கட காலத்தில் வாழும் நமக்குப் பொய்யின் மகத்துவம் புரிந்திருக்கிறது. ஆனால் சாத்தனார் காலத்தில் அந்தச் சங்க காலத்தில் வாழ்ந்த ஒர் இளம் பெண்ணுக்கு எள்ளளவும் புரியவில்லையே! புரிந்திருந்தால் அழகாய் ஒரு பொய்யை உதிர்த்து அன்பான காதனோடு கைகோத்து ஆடி யிருக்கலாம்... பாடியிருக்கலாம். களவொழுக்கத்தில் காலத்தை நீட்டியிருந்திருக்கலாம். நன்றாகப் பழகாமல் நடுத்தெருவில் சைக்கிள் விட்டு நாலுபேர் மீது மோதிக் காலிலும் கையிலும் அடிபட்டு நிற்பவளைப்போல் சரியாகப் பொய் சொல்லத் தெரியாமல் தாயிடம் மாட்டிக் கொள்கிறாள். அந்தப் பெண் இனி அவள் வீட்டுக்குள்ளே கிடக்க வேண்டுமே வெளியே போக முடியாதே என்று அனுதாபப்படும் தோழி, இதோ அந்த அப்பாவிப் பெண்ணை அறிமுகப்படுத்து கிறாள். -