பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 45 ஆலோலம், சோ, சோ என்று குருவிகளையும் கிளிகளையும் விரட்டியடிக்கிறாள்; தினமும் பொறுப்பாய்த் தினைப் புனத்தைக் தாக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு வரும் தாய் பரண்மீது மகள் இல்லாததைக் கவனிக்கிறாள். சுற்றுமுற்றும் தேடுகிறாள். கொஞ்ச நேரத்தில் மணி யோசையாய்த் தோழி முன்னால் வர, பிடியாய்த் தலைவி பின்னால் வருகிறாள். தாய்க்கு ஒரளவு புரிந்துவிட்டது. இருந்தாலும் ஒன்றும் தெரியாததுபோல் 'சிவந்த வாயுள்ள பச்சைக்கிளிகள் தினைக் கொல்லையில் மணிகளைக் கவர்ந்து கொண்டிருக்க அவற்றை விரட்டாமல் நீ எங்கே சென்றாய்' என்று கேட்கிறாள். ஆத்திரப்படாமல், அன்பாகத்தான் கேட்கிறாள். அதற்கேற்ப, படபடப்பில்லாமல், பயமில்லாமல் தலைவியும் பதில் சொல்லலாம். காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்' என்று ஒரு பொய்யை நிதானமாய்ச் சொல்லலாம். ஆனால்..... 'உங்களுக்குத் தெரிந்த ஏழையைப் பற்றி எழுதி வாருங்கள்' என்று ஆசிரியர் சொல்ல, அடுத்த நாள் 'ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஏழை. அந்த ஏழைக்கு ஒரே ஒரு பங்களா. அந்தப் பங்களாவின் காவல்காரன் ஏழை; சமையல்காரன் ஏழை; காரோட்டி ஏழை என்று எழுதி வந்த சீமான் வீட்டுச் சிறுமியைப்போல் சிரிக்கும்படி பதில் சொல்கிறாள். 'வடக்குத் தெரு 7A வீட்டில் வசிக்கும் அந்த மீசைக்கார இளைஞனை நான் கண்டதே இல்லை' என்று சொன்னால் என்ன அர்த்தம். அந்த மாதிரி சொல்கிறாள். 'அருவிகள் ஒலிக்குமே அந்த மலை.... அந்த மலைக்கு அதிபதியாக இருக்கிறானே அந்தத் தலைவன்... அவனை எனக்குத் தெரியவே தெரியாது. சத்தியமாக அவனைப் பார்க்கவே இல்லை; அவனோடு சேர்ந்து பூப்பறிக்கவே இல்லை. அவனோடு சேர்ந்து சுனையில் மூழ்கி நீராடவே இல்லை' என்கிறாள். எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பாணியில் உளறுகிறாள். அதைக் கேட்கும் தாய் 'உருப்படியாய் ஒரு பொய்கூடச் சொல்லத் தெரியவில்லையே.... இவள் எப்படிப் பிழைக்கப் போகிறாளோ என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக வேறு எதுவும் கேட்காமல் குனிந்தபடி, உள்ளுக்குள் பழைய காலத்தை நினைத்துக் குளிர்ந்தபடி செல்கிறாள். 'அவ்வளவுதான். தாய்க்கு எல்லாம் தெரிந்துவிட்டது. இனி என்ன ஆகுமோ களவின்பத்தை துய்க்க முடியாதே என்று தோழி, தலைவியை முன் நிறுத்தி அவளிடம் பேசுவதைப்போல வேலி