பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 盈_鑫雳 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் இருக்கும்வரை இருக்கும் மீரா என்ற அற்புத மனிதரின், கவிதைப் படைப்பாளியின் பெயர். வாழ்நாள் சாதனையாளர் என்று வாழ்த்தியது சிற்பி அறக்கட்டளை. 'கவிக்கோ விருதளித்து மகிழ்ந்தது கவிக்கோ அறக்கட்டளை. கங்கை தந்த கவி அன்னம் எனப் போற்றினார் இராகுலதாசன். கங்கையில் பூத்த கவிமலர் என்று வாழ்த்தினார் கவிஞர் மேத்தா. மீரா ஒரு தனிமனிதர் அல்ல, ஒரு நிறுவனம் என்று பதிவு செய்தது இந்தியா டுடே' இதழ். என்னைக் கண்டவர். என் படைப்பை அச்சு வாகனத்தில் ஏற்றி வளர்த்தவர் அவர்...... இப்படி எத்தனை தமிழ்ப் படைப்பாளிகள் நெஞ்சார நினைத்து ஏத்தும் படைப்பாளி கவிஞர் மீரா. அன்னம் - அகரம் நிறுவனங்கள், அன்னம் விடுதூது இதழ்கள், நவகவிதை வரிசைகள் புதுக்கவிதைப் படையல்கள், திரைப்படம், வரலாறு, சமூகவியல் என்று புல்துறைப் படைப்பு வெளியீடுகள் - இவை கவிஞரின் தமிழ்ப்பாணி. 'இராசேந்திரன் கவிதைகள் முதல் மீரா கவிதைகள் வரை அவரின் கவிதைப் படையல்கள்தாம் எத்தனை. 'கனவுகள் என்ற பெயரில் 'அக வெளியீடுகள். 'ஊசிகள் என்ற பெயரில் புறத்தினைப் பாடல்கள். கவியரங்க மின்னல்கள். குக்கூ நறுக்குகள் இப்படி தமிழ்க் கவிதை இலக்கியத்தில் இளந்தென்றலாய் நம் மனம் கவர்ந்த கவிஞர் மீராவின் முதலாண்டு நினைவு நாளில் சிவகங்கை நகரில் கவிஞர்திருநாள் என்ற சங்கமத் திருநாள் கொண்டாடப்படும் நாளில் இக்கட்டுரை நூல் வெளிவருகிறது.