பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 49 தலைவனையும், "மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' என்பதற் இணங்கத் தலைவன் வினை முடித்துத் திரும்பும் வரை ஆற்றி யிருக்கும் தலைவியையும் முல்லைப்பாட்டும் நெடுநல் வாடையும் காட்டுகின்றன. இவற்றுள் வரும் தலைமக்களை நீர்ப்படைக் காதையில் வரும் குட்டுவனும் அவன் மனத்துக்கினிய கோப்பெருந் தேவியும் நினைவுபடுத்துகிறார்கள். வாளே தெய்வமாய் வடுவே பிரசாதமாய்க்கருதிய தமிழி னத்தின் எழு ஞாயிறாகத் திகழ்கிறான் செங்குட்டுவன். இமயத்தி னின்றும் கொண்ட பத்தினிக் கடவுள் எழுதிய கல்லைத் 'தென் தமிழாற்றல் அறியாது மலைந்த கனக விசயர்தம் கதிர் முடியேற்றிச் சென்று கங்கையாற்றில் நீர்ப்படை செய்கிறான். பின்னர் கங்கையின் தென்கரையில் ஆரிய மன்னரால் அமைக்கப்பட்ட பாசறையில் படையுடன் தங்குகிறான்; போரிலே மறங்காட்டி "வானவ மகளிரின் வதுவை சூட்டயர்ந் தோர்' மைந்தர்களுக்கும் பகை முடித்துப் 'புண்தோய் குருதியிற் பொலிந்த மைந்தர்'களுக்கும் 'வாகைப் பொலந்தோடு பெருநாள் அயமம் பிறக்கிடக் கொடுத்துக்" களிக்கின்றான். இங்ஙனம் வீரமே கொலுவீற்றிருப்பதைப் போல் செங்குட்டுவன் வீற்றிருக்கிறான். நீர்ப்படைக் காதையில். வீரத்தால் வெற்றி கண்ட பின்னர் - வினை முடித்த பின்னர் - செங்குட்டுவன் நெஞ்சம் காதலை நோக்கித் தாவுகிறது. எனவே மாடலமறையவன், கண்ணகியின் சீற்றங் கண்ட மதுரை தொடங்கி மாற்றங் கண்ட - புதிய கொற்றங் கண்ட மதுரை வரையுள்ள வரலாற்றைக் கூறிமுடித்தவுடன் குட்டுவன் வெண்பிறை தோன்றும் அந்தி வானத்தைப் பார்க்கிறான். அந்த மாலை - அந்தி மாலைஅவனுக்குப் 'படர்கூர் மாலை' (பிரிந்தவர்க்கு வருத்தம் தரும் மாலை)யாகப் படுகிறது. கடமையில் மூழ்கியிருந்ததால் இத்தனை நாட்களும் காதலை மறக்க முடிந்தது. இப்போது கடமை முடிந்தது. காதல் மலர்ந்தது; மயக்கம் தருகிறது சேரனின் ஏக்கங் கலந்த எண்ணத்தைக் குறிப்பால் அறிந்த கணியன், 'எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது மண்ணாள்வேந்தே:

  • வஞ்சியைப் பிரிந்து வந்து முப்பத்திரண்டு திங்கள் (8x4=32) ஆயிற்று

என்கிறான் கணியன்.