பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 50 என்கிறான். வஞ்சி நீங்கியது என்ற ஒரே தொடரில் வஞ்சி நகரத்ததை நீங்கியாதயும் வஞ்சிக் கொடியான அரச மாதேவியை நீங்கியதையும் குறிப்பிடுகிறான். அவன் குறிப்பை உணர்ந்து குட்டுவன் தென்திசை ஏகத் தயாராகிறான். கங்கைக் கரையில் பாசறையில் - செங்குட்டுவனைக் காட்டும் அடிகள் பேரியாற்றங்கரையில் - வஞ்சி மாநகர அரண்மனை அந்தப்புரத்தில், பொற்கட்டிலில் சேரமாதேவி புரண்டு படுத்துக் கொண்டிருப்பதையும் காட்டுகிறார். அவள் 'துயிலாற்றுப் படுத்திக் கொண்டிருக்கிறாள். பிரிவின் வெயிலில் வாடும் அவளுக்கு ஆறுதல் நிழலைக் காட்டக் கருதிய செவிலித்தாயார் தோள்துணை துறந்த துயரிங்கு ஒழிக’ என்கிறார்கள். ஏவல் புரியும் கூனும் குறளும், 'பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான்' என நல்வாக்குக் கொடுக்கின்றார்கள். இறுதியில் கோப்பெருந்தேவியின் நெகிழ்ந்த வளை மகிழ்ச்சியாய் செறியும்படி வெண்கொற்றக் குடை நிழற்ற யானை மீது அமர்ந்து வஞ்சியுள் செங்குட்டுவன் நுழைகின்றான். இங்ங்னம் சங்கப் புலவர்களால் வாழ்க்கையில் இரு கண்களாகப் போற்றப்பட்ட வீரத்தையும் காதலையும் அடிகள் நீர்ப்படைக் காதையில் அழகாக இணைத்துள்ளார். கண்ணகி தொடர்புள்ள நிகழ்ச்சிகளையும் செங்குட்டுவன், வேண்மாள் என்றும் பெயர்களை யும் கொஞ்சம் மறந்துவிட்டுப் பார்ப்போமேயானால் நீர்ப்படைக் - - g - +. காதையும் ஒரு முல்லைப் பாட்டே' 2. நானிலக் காட்சி: தொல்காப்பியர் நிலங்களை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நான்காகப் பிரித்தார். இந்நிலங்களுள் முல்லையும் குறிஞ்சியும்

& - * - * - - - 4. சேரமாதேவி ஆற்றியிருத்தல் என்னும் முல்லைத்திணைக்குரிய கற்பொழுக்

கத்தைக் கடைப்பிடிப்பதால் இதுவும் ஒரு முல்லைப் பாட்டாயிற்று என்க.