பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 52 கொம்புள்ள காளைகளை விளித்து கொம்பில்லாத காளைகளாஇறு உழவர்கள் பாடும் பாட்டு, கடற்கரையில் - நெய்தல் நிலத்தில் . புன்னைமர நிழலில் கழங்கு ஆடும் மகளிர் பாடும் பாட்டு ஆகிய பாட்டுக்களின் ஒலிகளை கூறுவதன் வாயிலாக நானிலத்தையும் நானில மக்களின் வாழ்க்கையையும் கலையார்வத்துடன் கதையோடு இணைத்து அடிகள் சித்திரித்துள்ளார். சங்க இலக்கியங்களில் சிறப்பாகக் காணப்படும் அகம்புறம் என்னும் பாகுபாட்டையும் நானிலப் பாகு பாட்டையும் அடிகள் நீர்ப்படைக் காதையில் சுவைபடப் புகுத்தியுள்ளார். எனதுே அடிகளின் நன்கொடையான சிலம்பு ஒரு தொடர்நிலைச் செய்யுளாக மட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கிய மரபைத் தொடர்ந்து நிலை நிறுத்த முயன்ற செய்யுளாகவும் விளங்குகிறது எனலாம். 豪 %