பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 55 சங்க காலத்தில் இலக்கியத்தை அகம், புறம் என்று வகைப் படுத்தியதில் கூட சரிபாதி அகத்துறைக்கு அளிக்கப்பட்டது. முப்பாலில் மூன்றிலொரு பங்கை வள்ளுவர் காதலுக்கு வழங்குகிறார். இளங்கோவடிகள், திருத்தக்க தேவர் போன்ற துறவிகள்கூட இங்கே காதல் பற்றிப் பாட வேண்டியதாயிற்று. பிற்காலத்தில் பக்தி இயக்கக் கவிஞர்கள் கூடக் காதலைத் தவிர்க்க முடியவில்லை. இந்த வகையில் அண்மையில் (27.12.96) சென்னை இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில் நிகழ்த்தப்பட்ட கருத்துரை மனங்கொள்ளத்தக்கது. கனடாவில் ஒட்டாவா நகரில் உள்ள கார்லெட்டான் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.சுப்பிரமணியன் ஆய்வுரை நிகழ்த்தினார். வைணவப் பக்திப் பாவாணர்கள் சங்க கால அகத் துறையைப் பின்பற்றி பக்திமய சிருங்காரம் (Devotional Romanticism) தோய்ந்த பாடல்களைப் பாடினர். சைவ நாயன்மார்கள் சங்கப் பா வகைகளில் ஒன்றான ஆற்றுப் படையை ஏற்று அதன்வழி தேவாரத்தில் சைவத் திருத்தலங்களின் இயற்கையழகைப் புகழ்ந்தும் அத்தலத்து இறைவனில் மன்னரைக் கண்டும் அல்லது ஒப்பிட்டும் பாடியுள்ளனர். இவ்வாறு பக்திப் பாக்கள் அகம் சார்ந்ததாகவும் பக்தியை உள்ளடக்கிய சிருங்காரம் கலந்ததாகவும் அமைந்துவிட்டதால் தென்னாட்டு ஆலயங்களில் ஆண்டவனுக்கான அர்ப்பணிப்பு ஆடல், பாடல்கள் வடிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது. மேற்சொன்ன விதத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுரையின் படி பக்திப் பனுவல்களிலேகூட காதல் ஊடுருவி வந்திருக்க, பாரதியை மட்டும் காதல் விட்டுவிடுமா? ஸ்வசரிதை'யில் ஒரு பகுதியும் காவியம்’ என்று குறிப்பிடப்படுவனவற்றுள் முதல் இரண்டு காவியங்களும், காதல் என்னுந் தலைப்பில் அமைந்த கவிதைகளும் பாரதியின் 'காதல் கவிதைகளாகக் கருதப்பட்ட வேண்டியனவே. இவை தவிர முன்னர் சொன்னதுபோல பாரதியின் பல்வேறு கவிதைகளிலும் காதல் இடம்பெற்றுள்ளது. தோத்திரப் பாடல்களில் வருகிற மூன்று தெய்வங்களின் பேரிலான காதல் கவிதைகளும் பிள்ளைக்காதல் அடங்கிய ஸ்வசரிதைக் கவிதையும் காதல் காவியமான குயில் பாட்டும், கண்ணன் பாட்டில் அடங்கியுள்ள 'கண்ணம்மா என் காதலி",