பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் #56

'கண்ணன் என் காதலன்' என அவற்றைக் குறிப்பிட்டுக் கரு, இனி அவற்றைக் கால வரிசைப்படி பார்க்கலாம்.


2. பிள்ளைக் காதல்

பாரதியின் காதல் கவிதை அடங்கியனவற்றுள் காலத்தால் முந்தியது. "ஸ்வசரிதை 1910 இல் வெளி வந்தது.

பிள்ளைக்காதலை உள்ளடக்கிய இந்த சுயசரிதைக் கவிதையில்

பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே

எனும் பட்டினத்தடிகளின் பாடல் வரிகளை முகப்பில் குறிப்பிட்டு பாரதி தொடங்குவதன் மூலம் வாழ்க்கையை ஒரு கனவாகவே கருதிவிட்டானோ என்ற எண்ண இடமளிக்கிறது. ஆனால்,

ஒன்பதாய பிராயத்தள்...
......ஐந்து பிராயத்தில்
ஏங்க விட்டு விண்ணெய்திய தாய்தனை
ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்.....
ஈங்கொர் கன்னியைப் பன்னிரண்டாண்டனுள்....


என்றெல்லாம் ஸ்வசரிதை'யில் அவ்வப்போது அடைந்திருந்த வயதினைத் தெளிவாக பாரதி தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதால் 'ஸ்வசரிதை' ஒரு கனவுக் கவிதையன்று, உண்மைச் சுயசரிதை எனக் கொள்ள முடிகிறது. அவ்வாறிருக்க, சுயசரிதையில் ஒரு பகுதியாக வரும் 'பிள்ளைக்காதல்' மட்டும் எப்படி கனவாகவோ, கற்பனையாகவோ இருக்க முடியும்?

பாரதிக்குப் பன்னிரண்டு வயதில் திருமணம் நடந்துவிடுகிறது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, பத்து வயதுப் பாலியத் திலேயே பாரதி காதல் வயப்பட்டான்.

ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழ நெஞ்சிடைபூன்றி வணங்கினன்