பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மீரா கட்டுரைகள் : 57 எனத் தன் ஆழ் மனத்தில் அக் கன்னியை காதல் தெய்வமாய் வணங்கிய பாரதிக்கு, மற்றோர் பெண்ணை மணஞ் செய்த போழ்து முன் மாதராளிடைக் கொண்டதோர் காதல்தான் நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன் கற்றுங் கேட்டு மறிவு முதிருமுன் காதலொன்று கடமையென்றாயின பத்து வயதிலிருக்கும் போதே ஒன்பது வயதுக் கன்னி ஒருத்தியிடம் தனக்குக் காதல் ஏற்பட்டுவிட்டதாக, பன்னிரண்டு வயதில் தனக்குத் திருமணமானபோது பாரதி, யாரிடமாவது வெளியிட்டிருக்க முடியுமா? தாயிடம் வேண்டுமானால் தயங்கித் தயங்கியாவது சொல்லலாம். ஆனால் அதற்கும் வழியில்லை. அவனுக்கு ஐந்து வயதிருக்கும் போதே காலதேவன் அன்னையை அழைத்துக் கொண்டுவிட்டான். துணிந்து அவன் யாரிடமாவது தன் காதலை வெளியிட்டிருந்தாலும் கேலி பேசியிருப்பார்களே தவிர, பிள்ளைக்காதலை ஒரு பொருட்டாகவே கருதியிருக்கமாட்டார்கள். தன் பிள்ளைக்காதலை பாரதி எவரிடமும் வெளிப்படுத்தியதற்கான குறிப்பேதும் கவிதையில் இல்லை. ஆனால் அது ஒருதலைக் காதலாகவும் தெரியவில்லை. தனது ஆழ்மனத்தில் அக்காதலியைப் பூட்டிவைத்துப் பூசித்தான் எனுங் குறிப்புத் தவிர வேறு எதுவும் இல்லை. . 'பத்து வயதிற்குள் உனக்குக் காதலா? சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கிறது' என்று பேசுவோர் வாயை அடைக்கவே, பாரதி தானே தன் பாலியப் பருவக் காதலுக்கு, 'பிள்ளைக்காதல்' எனப் பெயரிட்டுவிட்டான். காதலுக்காக மனத்தளவில் ஒரு வாழ்க்கையையும், கடமைக்காக (திருமணம் செய்து கொண்டு) ஒரு வாழ்க்கையையும் நடத்த வேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டதை மேற்கண்ட கவிதையில் பாரதி வருத்தத்தோடு குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது. 'மாநிலங் கொண்டாடும் மாசில்லாக் காதல் எதுவென்று பாரதியிடம் கேட்டால் பருவக் காதலுக்கு அந்தப் பாராட்டை அளிக்கமாட்டான்.