பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை போலவே பெருமைமிக்கன மீராவின் கட்டுரைகள், கடிதங்கள், உரையாடல்கள். இலக்கியம் மலரில் கிளைத்து மணம் போல அவரின் சொற்களில் தேக்கியிருக்கும் இலக்கியச் சுவை அனுபவித்த நெஞ்சங்கள்தாம் அறியும். நிலத்தின் தன்மைக்கேற்ப நீர், நிறமும் மணமும் பெறுவதுபோல கவிஞர் மீராவின் நெஞ்சில் ஊற்றெடுத்து நிற்பவை தமிழ் உணர்வு, சமூகநேயம், படைப்புக் காதல். எந்த ஊரில் எந்தக் கடையில் நல்ல காப்பி கிடைக்கும் என்று மீராவிற்குத்தான் தெரியும் என்று நண்பர்கள் சொல்வதுண்டு. இராசிபுரத்து நெய்தோசை, கோயில்பட்டி கடலைமிட்டாய், சாத்துர் வெள்ளரிக்காய், மதுரைப் புலவு - என்று வாழ்க்கையைச் சுவைத்து சுவைத்துப் பார்ப்பவர் மீரா. இலக்கியத்தில் திரைப்படத்தில் ஒவியத்தில் போட்டோவில் என்று அவர் எதைத் தேர்வு செய்தாலும் அவர் ஒரு அற்புத ரசிகர், ஒர் உயர்ந்த கலைஞர் என்பதை அடையாளம் காட்டுவதாக அது அமையும். மேலோட்டமாகப் பார்த்தால் ரசிப்பு என்று தோன்றும். ஆழ நோக்கினால் அவரின் கருத்துக்களில் கறாரான ஒரு விமர்சனம் செறிவுகட்டி நிற்பது தெரியும். நான் 'சுவடு பத்திரிகையை நண்பர்கள் அகல்யா, சண்முக சுந்தரம் ஆகியோருடன் இணைந்து நடத்தியபோது இதழின் கடைசிப் பக்கங்களில் அவரை எழுதுமாறு கேட்டுக்கொண்டோம். ஒவ்வொரு கட்டுரையிலும் மீராவின் முத்திரை தரப்பதிவாக இருக்கும். வார்த்தைகளில் ஒரு கவிதை விளையாட்டு - ஒரு செல்லக் கிண்டல், அப்புறம் ஒரு தத்துவ விமர்சனம் படைப்பாளியின் கரிசனம் எல்லாம் அந்தக் கட்டுரைகளில் துலங்கக் காணலாம். ஜூனியர் விகடனில் அவர் ஒரு கட்டுரைத் தொடர் எழுதினார். ஒவ்வொன்றும் கட்டுரை இலக்கியம். சிவகங்கை நகரத்தில் குரங்குகளின் அட்டகாசத்தைப் பற்றி அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். நகரத்தின் ஒவ்வொரு மனிதரும் மீராவின் தமிழ் வண்ணமும் தங்கள் வாழ்க்கை வண்ணமும் கலந்து நிற்பதைக் கண்டனர். சிவகங்கையில் எந்த அரசியல் கட்சிக் கூட்டம் நடந்தாலும் அதில் 'தமிழ் வணக்கம் போல மீரா வணக்கம் இடம்பெறும். காளிமுத்து, வை.கோ., நா. காமராசர், முத்துராமலிங்கம், குமரி அனந்தன், க.சுப்பு, தென்னரசு இப்படிப் பலரும் ஆற்றும் உரைகளில் மீரா கவிதை மனக்கும். என்னைப் போன்ற சிவகங்கைக்காரர் களுக்கு வானத்தில் பறப்பதுபோல இருக்கும்.