பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 59 என்னி யன்றுமற் றெங்ங்ணம் வாய்ந்ததோ என்னிடத்தவ ளிங்கிதம் பூண்டதே! இவ்வாறு இங்கிதம்' என்று குறிப்பிட்டுவிட்டு அடுத்து அன்பு என்று அடுத்த கட்டதிற்குச் செல்கிறான். இவ்வாறு: ஆவல் கொண்ட அரும்பெறற் கன்னிதான் அன்பெ னக்கங் களித்திட லாயினள் என்று அவளும் இவன் மீது காதல் பூண்டதை உரைக்கிறான். அது எப்படிப்பட்ட காதல் என்பதை கான கத்தி லரண்டு பறவைகள் காதலுற்றது போலவு மாங்ங்னே என்று விளக்கிவிட்டு, இவ்வாறு சிறகடித்துப் பறந்து காதல் இணைகளாக வாழ்ந்த நாட்களைப் பாரதி, தேன கத்த மணிமொழி யாளொடு தெய்வ நாட்கள் சில கழித்தேனரோ! என்று பாடி முடிப்பான். தன் காதல் நிகழ்ந்த நாட்கள் அமரத்துவம் வாய்ந்தவை. நெஞ்சில் அழியா இடம்பெற்றவை என்பதை உணர்த்தவே, 'தெய்வ நாட்கள் என்று பாரதி குறிப்பிட்டான். காதலை உய்தலுக்குரியதாக உயர்த்திட இதைவிடப் பொருத்தமாக உணர்த்திடவும் கூடுமோ? பாரதிக்கு ஆங்கிலக் கல்வி அளிக்க எட்டயபுரத்திலிருந்து நெல்லைக்கு அனுப்பி வைக்கிறார் பெற்ற தந்தை. அன்றைக்கு ஆங்கிலேயர் மூலம் புகுத்தப்பட்ட கல்வியையே அற்பர் கல்வி என்று வெறுக்கிறான். காதலியிடமிருந்து பிரித்ததும் அதற்கொரு காரணமாக வெளிப்படுகிறது. கவிதையில், இவ்வாறு: அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ் வற்பர் கல்வியி னெஞ்சு பொருந்துமோ? 'காதல் மயிலைப் பிரிந்து கல்வி பயில, மனம் கல்வியில் ஈடுபாடு காட்டுமா? என்று உள்ளத்தில் பட்டதை உள்ளபடி பாடி வைக்கும் துணிவு பாரதிக்கு மட்டுமே உரியதாம். ஆங்கிலக் கல்வி பயிலச் சென்றதில்