பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீராகட்டுரைகள் : 60 தீதெனக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன என்று அவன் குறிப்பிடும் தீதில் தன் பிரியத்துக்குரிய காதலியை பிரிய நேர்ந்ததையும் சேர்த்துத்தான் பாரதி பாடுகிறான் . சாடுகிறான் என்றுகூடச் சொல்லலாம். கல்வி பயிலப் போகும்போது காத,ை வெளிப்படுத்த முடியா திருந்த பாரதி திருமணத்தின் போதாவது துணிந்து சொன்னானா? இல்லை, ஏன்? தீங்கு மற்றிதி னுண்டென்றறிந்தவன் செயலெதிர்க்குந் திறனில னாயினேன். காதலுக்கு எதிராகத் தன் மீது திணிக்கப்படும் திருமணம் இது என்று தெரிந்திருந்தும் எதிர்க்கத் திறனில்லாதிருந்ததன் மீது கழிவிரக்கம் கொள்கிறான். பிள்ளைக்காதலில், பாரதிக்கு ஏற்பட்ட தோல்விதான் காதல் பாக்களில் எவரும் தொடாத எல்லைகளைத் தொடக்கூடியவனாக அவனைக் கொண்டு சென்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அன்ன போழ்தினி னுற்ற கனவினை அந்த மிழ்ச் சொலி லெவ்வணஞ் சொல்லுவேன் என்று பாரதி சொல்வதை வைத்துப் பிள்ளைக் காதல் ஒரு கனவு என்றுரைப்பார்தம் ஐயம் நீங்கிவிடுமாறு, சொன்ன தீங்கன வங்கு துயிலிடைத் தோய்ந்ததன்று நனவிடைத் தோய்ந்ததால் என்று பாடி, அந்தப் பிள்ளைக்காதல் நனவு - அவன் வாழ்வில் நிகழ்ந்தது என்று வெளிப்படுத்துகிறான். பிள்ளைக்காதல் இடம்பெற்றுள்ள ஸ்வசரிதையைத் தொடர்ந்து வரும் பாரதி அறுபத்தாறு'விலும் காதல் பேசப்படுகிறது. போற்றிப் பாடப்படுகிறது. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். (குறள் - 131) என்றபடி, ஒழுக்கம் சிறப்பினைத் தருகிற காரணத்தைக் கூறி அவ் வொழுக்கத்தினை உயிரினும் மேலாகப் பாதுகாக்க அறிவுறுத்துவார் வள்ளுவப் பேராசான். காரணத்தைக் கூறிகாரிய மாற்ற அறிவுறுத்தும் வள்ளுவர் வழிமுறையைக் கையாள்வதில் பாரதிக்குப் பெருவிருப்பு போலும்!