பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 2 3. குயில்பாட்டு பாரதியின் காவியங்களின் வரிசையில் முதலிடம் பெறுவது, 19] ஆம் ஆண்டில் வெளி வந்த, காதல் காவியமான குயில் பாட்டு இக்குயில் பாட்டை மெய்ம்மை சார்ந்த கவிதை (Mystic Poetry என்று குறிப்பிடுவர். ஒரு குயில், ஒரு மாடு, ஒரு குரங்கு ஆகியவற்றின் கதையான குயில் 750 அடிகளில் அமைந்தது. கவிஞனின் கனவில் உதித் அழகும், காதலும் தழுவிய கதை. புதுவையில் ஒரு நாள் பாரதி ஒரு அழகிய தோப்பிற்கு செல்கிறான். அங்கு கூவிக் கொண்டிருக்கும் ஒரு குயிலின் இசையில் மயங்குகிறான். மறுநாளும் அங்கு செல்ல, அக்குயில் ஒரு குரங்குடன் காதல் செய்வதைக் காண்கிறான். வாளெடுத்து வெட்டச் சென்றபோது குயிலும் குரங்கும் மறைந்து விடுகின்றன. மூன்றாவது நாள் அங்கு செல்ல, அக்குயில் ஒரு மாட்டுடன் உரையாடுவதைக் கண்டு ஆத்திரம் கொண்டு, வாளை எடுத்து வீசுகின்றான். நான்காம் நாள் அதே தோப்பில் குயில் மட்டும் அமர்ந்துள்ளது. பாரதி அதை வெட்ட முயன்றபோது அது தன் வரலாற்றைக் கூறச் தொடங்க அங்கே குயில் மறைந்து எழிலார்ந்த மங்கை தென்பட்டு மறைகிறாள். அந்தக் கற்பனைசார் கனவு மறைந்து பாரதியும் நனவுலகு திரும்புகிறான். இதுவே குயில்பாட்டின் கதை. மனிதன், குரங்கு மாடு மூன்றிடத்திலும் குயில் காதல் கொள்கிறது. குயில் சீவான்மா கவிஞன் பரமான்மா. இவ்விருவர் காதல் அநித்யமானது. குரங்கு என்பது மனம்; மாடு என்பது புத்தி, சீவான்மாவாகிய குயில் எனக்குச் சாதல் வேண்டும் எனக் கூறி காதல் வேண்டும் என்கிறது. உயர் நீதிமன்றத்தில் நீதியரசராயிருந்த எச்.ஆர். கிருஷ்ணன், ஐ.சி.எஸ். குயில்பாட்டில் கவி உளம் காண முயன்றுள்ளார்.