பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 67 தண் என்(று) இருந்த(து) அடி. புதி(து) ஒர் சாந்தி பிறந்த(து) அடி! எண்ணி எண்ணிப் பார்த்தேன் அவன்தான்யார்டி: என்று சிந்தை செய்தேன். கண்ணன் திருவுருவம் அங்ங்ன்ே கண்ணின் முன்னின்ற(து) அடி! தன் மனந்தொட்டகண்ணனைப் போற்றிக் காதலிபாடும் கவிதையை நாயகி - நாயக பாவ பக்திப் பாடலாக அல்லாமல், அவன் உடலியல் ரீதியாக இன்பம் தந்ததைத் தெரிவிக்கும் கவிதையாக அல்லவாபாரதி பாடுகிறான். இது குறித்த பார்வைகள் - மதிப்பீடுகள் விதம் விதமாக வேறுபட்டிருக்கலாம். ஆனால் காதல் கவிதை என்ற மட்டில், பாரதிக்கு இலக்கிய உலகில் அழியா இடம் அளித்திடுவதற்கு இந்த ஒரு கவிதை போதும். என்பார் இலக்கிய மேதை பி.பூரீ. விடுதலைப் போரட்ட வீரர், தமிழ்ச் சிறுகதை முன்னோடி வ. வே. சு. ஐயர் பாரதிக் கவிஞனின் மனநிலையைக் கண்டு சொல்வதில் வல்லவர் என நாம் நம்பலாம். ஏனெனில் அவர் பாரதியின் நண்பரும் கூட, அவன் கவியுளம் காண்பதற்கு அவர் பொருத்தமானவர் அல்லவா? ஆழ்வார்கள் நாயகி - நாயக பாவத்தில் தம்மையும், கண்ணனை யும் பாவித்துப் பாடியிருப்பதை திரு.வ.வே.சு ஐயர் குறிப்பிட்டு விட்டு பாரதியைப் பற்றிச் சொல்லும் போது, ஆயின் ஆழ்வார்களின் பக்தி நோக்கத்திலேயே (பாரதி) இப்பாடல்களைப் புனைந்துள்ளாரா என்பது கேள்விக் குரியது என்று கண்ணன் பாட்டின் பின்னணியை மற்றவர்கள் பார்ப்ப தினின்று வேறுபட்டுப் பார்க்கிறார். கண்ணன் பாட்டு என்றதுமே அதை எப்படியாவது பக்தியுடன் இணைத்துக் காணும் முயற்சிக்கு மாறுதலாக வித்தியாசமாகத் தான் பார்ப்பதற்கான விளக்கத்தினை அவர் தரத் தவறவில்லை. 'இந்தப் பாவத்தை ஆளுவது கத்தியின் கூர்ப்பக்கத்தின் மீது நடப்பதைப் போன்று கஷ்டமான காரியம். பூர் பாகவதத்திலும் கூட