பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணதாசனின் கவிதைகளை ரசிப்பதுபோல அவருடைய உரைநடை வசீகரம் பிடிக்கும். அதுபோலவே கவிதை, கட்டுரை இரண்டிலும் இலக்கியம் செய்யும் வித்தகர் மீரா. இதை ஒரு பதச் சோற்றாக இந்நூல் வெளிப்படுத்துகிறது. எனினும் இதில் விடுபட்ட ‘விகடன் கட்டுரைகள்', 'சுவடு கட்டுரைகள், மூட்டா ஆசிரியர் இதழின் கடைசிப் பக்கக் கட்டுரைகள் இவை போன்றே அவர் எழுதிய 'மண்ணியல் சிறுதேர் ரசனைக் கட்டுரைகள் ஆகியன வற்றை என் மனம் சுற்றி வருகிறது. கடிதங்களும் கூட அப்படித்தான். பின்னாளில் வெளியிடு வதற்காகக் கடிதங்கள் தீட்டும் எழுத்தாளர்களை நான் அறிவேன். மீராவின் கார்டுகளில் கடிதங்களில் சாய்வு எழுத்துக்களில் நிமிர்ந்திருக்கும் இலக்கிய அழகு. அவையும் நூலாக வெளிவர வேண்டும். இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளிலும் அவரின் நயம்பட உரைக்கும் தன்மையும் ஆழங்காற்பட்ட புலமையும், அவருக்கே உரிய நகைச்சுவையும் எளிமையும் கலந்த நடையும் துலங்கக் காணலாம். பசுமரத்தாணி போல் முத்திரை வாசகங்கள் இருக்கும். கேலிக்கும் கிண்டலுக்கும் பஞ்சம் இருக்காது. எதிர்பாராத அரிய தகவல்களும் தரவுகளும் வியப்பூட்டும். முதல் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். தமிழ் பயிற்றுமொழி ஆகக்கூடாது என்று கூக்குரல் எழுப்பியதற்கு எதிர்ப்புகளை மூன்று பதிவுகளாக வரைந்த கட்டுரை அது. அன்றைக்குப் புகழ்பெற்று இருந்த அரசியல் பெரியவர்களை, பத்திரிகைகளை, படிப்பாளிகளை மீரா எதிர்கொள்ளும் எழுத்தில் இலக்கிய நயமும், அறிவுத் திறமும் பளிச்சிடக் காண்கிறோம். ஆங்கிலத்தில் கற்றால் அடுத்த நாட்டில் வேலைவாய்ப்பு என்கிறீர்களே - 'அப்போதாவது அவர்கள் வேலைக்கு உறுதி தரமுடியுமா என்கிறார். அடுத்த மாநிலத்தில் வேலை கிடைக்குமா? ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக வைத்துள்ள நாகலாந்தில் கிடைக்குமா? - என்கிறார். 'நாகலாந்திற்குச் செல்வதற்கு ஆங்கிலம் மட்டும் பேதாதாது. ஆயுதமும் வேண்டும். அப்படிச் சென்றால்தான் நம் ஆயுள் கெட்டி என்று பொருள்' என்று கேலி ஊசி இறக்குகிறார். மொழிச் சிக்கல் தலையெடுக்கிறபோது