பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 72 ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம் என்று ஆசைக் காதலை வரவேற்றும் காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே என்று காதலின் ஆற்றலைப் போற்றியும் பாரதி பாடுகிறான். காத லொருவனைக் கைப்பிடித்தே யவன் காரியம் யாவினுங் கைகொடுத்து என்று காதலிக்கும் ஒருவனையே கணவனாகக் கைப்பிடிக்க வேண்டி பெண்களைக் காதல் கட்சியில் சேர்ந்து கணவனுக்கு உதவிடுமாறு பெண்கள் விடுதலைக் கும்மி"யில் பாரதி பாடுகிறான். 다. 7. ஒப்பியல் ஆய்வில் பாரதியின் காதல் கவிதைகள் ஒப்பியல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் பாரதியின் கவிதைகளில் பெரும்பாலானவை காதல் கவிதைகளே. திரு.ஜி.ஜான் சாமுவேல் ஷெல்லியையும், பாரதியையும் ஒப்பாய்வு செய்திருக்கிறார். டாக்டர் சிற்பியும், டாக்டர் சாமுவேல் தாசனும் பாரதியையும் வள்ளத்தோளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர். டாக்டர் பாலச்சந்திரன் (கவிஞர் பாலா) பாரதி யையும் கீட்சையும் ஒப்பிட்டு வானொலியில் பேருரையாற்றியது நூலாக வந்துள்ளது. இது தவிரப் பாரதியை பைரன், விட்மன், இராபர்ட் ஃப்ராஸ்ட் ஆகிய கவிஞர்களுடன் ஒப்பிட்டும் பேசப்பட்டுள்ளது. - "கெத்தேயின் மனோபாவனையை அப்படியே பாரதி யிடம் காண்கிறோம். பாரதி ஜெர்மனியில் பிறந்திருந்தார், கெத்தே வங்கத்தில் பிறந்திருந்தார், தாகூர் தமிழ்நாட்டில் பிறந்தார்: