பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம்: சில முற்போக்குச் சிந்தனைகள் - சில குறிப்புகள் தமிழ்க் கவிஞர்களின் சர்வதேசப் பார்வை எங்கேயோ ஒரு சிற்றுாரில், "பூங்குன்றம்' (தற்காலம் பசும்பொன் மாவட்டம் - மகிபாலன்பட்டி) எனும் சிற்றுாரில் பிறந்த கணியன் (கணியன் பூங்குன்றனார்) எழுதிய 'யாதும் ஊரே, யாவரும் கேளிர். என்ற பாடல் வரிகள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியால் மாஸ்கோ Lomposp;6|ai, “Every place is my place, Every man is my kins man” என்று முழக்கம் செய்யப்பட்டது. இந்த சர்வதேசக் கண்ணோட்டம் பாராட்டுக்குரியதன்றோ? சங்க காலப் புலவர்கள் தமிழக எல்லையோடு தங்களைச் சுருக்கிக் கொண்டவர்களல்லர். சங்க காலக் கவிஞர்கள் தம் கவிதை நாயகர், நாயகிகளை தமிழரை மட்டும் எண்ணிப் படைக்கவில்லை. எடுத்துக்காட்டாக அகப் பாடல்களைச் சொல்லலாம். காரணம் காதல் - அன்பு' எல்லா நாட்டுக்கும் பொது. எனவே காதல் பற்றிய பாடல்களில் ஊரையோ பேரையோ சுட்டாமலே பாடியுள்ளனர். எனவே அவற்றில் வருகிற தலைவன் தலைவி ஒரு மலாய் மங்கையாக இருக்கலாம். தலைவனும் மலாய் ஆடவனாக அமையலாம். தமிழ்க் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை தமிழனை மட்டும் எண்ணிப் படைக்காமல் உலகை முன்நிறுத்திப் பாடுவதிலேயே உவகை கொண்டனர். திருவள்ளுவர் தம் குறளைப் பாடத் தொடங்கியவர், முதற் குறளை 'அகர...... முதற்றே உலகு" என்று முடிக்கிறார்.