பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 75 கம்பர் 'உலகம் யாவையும் தாமுளவாக்கலும்... என்றுதான் இராமாயணத்தை தொடங்குகிறார். சேக்கிழார் தன் பெரிய புராணத்தை 'உலகெலாம்..... என்று தொடங்குகிறார். இந்த நூற்றாண்டில் வந்த பாரதிக்கு வாழையடி வாழையென வந்த இந்தக் கண்ணோட்டம் இருந்ததால்தான் 'புதிய ருஷியா’ப் போற்றுகிறான். 'பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்துரைக்கிறான். இத்தாலிய" மாஜினியின் பிரதிக்கினை'யைப் பிரகடனம் செய்கிறான். 'பிஜித் தீவின் கரும்புத்தோட்டத் தொழிலாளர் பற்றிப் பாடுகிறான். 마 பெண்ணியம் இளங்கோவடிகள், நாட்டில் பெண்களைப் பற்றி, ஊறிப் போயிருந்த எண்ணங்களில் இருந்து மக்களை விடுவிக்க மேலும் ஒரு அடி முன்வைத்தவர். அவர் சிலப்பதிகாரத்தில் படைத்த கண்ணகி முன் பகுதியில் வழக்கமான வீட்டுக்குள் அடங்கிய பெண்ணாகக் காட்சி தந்து இறுதிப் பகுதியில் மன்னனையே தட்டிக் கேட்கும் மங்கையாக விசுவரூபம் எடுக்கிறாள். தனக்கு ஏற்பட்ட இன்னலுக்கு எண்ணெய் ஊற்றி நெருப்பை வைத்துக் கொள்ளவில்லை. வையை ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளவில்லை. மாவீரர்கள் கூட மண்டியிடும் அவையில் வீறுகொண்டு எழுச்சி கொள்பவளாக ஒரு பெண்ணைப் படைத்துள்ளார். இன்னொரு பெண் மாதவி; பரத்தைமை குலத்தில் பிறந்தவள். ஆடல், பாடல், உடலின்பம் என்று அவள் வாழ்வை முடித்திருக்க வேண்டும். ஆனால் அவள் ஒருவனோடு வாழும் வாழ்வுக்கு மாறுகிறாள். இறுதியில் அந்த