பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 76 வாழ்வை விட்டு சமயவாழ்வில் ஈடுபட்டுத் தன் மகளையும் துறவுக்கு ஈடுபடுத்துகிறாள். இவ்வாறு இரு பெண்களை வழக்க மான நிலையிலிருந்து மாற்றி இலட்சியக் கதாபாத்திரங்களாக உயர்த்துகிறார். முன்சீப் வேதநாயகம் பிள்ளை "பெண்மதிமாலை தந்து முதல் பெண்ணியம் பற்றிய எண்ணங்களை விதைத்தவர். பாரதி தன் பாடல்களில் "புதுமைப் பெண்ணை’ப் படைத்தவர். "மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம். என முழங்குகிறார். அவர் வழியில் பாரதிதாசன் கைம்மையைப் பழிக்கிறார். பெண்கல்வி பேசுகிறார். பெண் விடுதலை வேண்டுகிறார். அயல்நாடுகளில் பிஜி கரும்புத் தோட்டங்களில் கூலிவேலை செய்யச் சென்றதமிழ்ப் பெண்கள் வெள்ளையரால் கற்பிழக்க நேர்ந்த அவலத்தைப் பாடி, அயல்நாட்டில் வாழும் தமிழ்ப் பெண்கள் நிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் பாரதி. நெஞ்சங் குமுறுகிறார் - கற்பு நீங்கிடச் செய்யுங் கொடுமையிலேயந்த பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்பட்டு மடிந்து மடிந்தொரு தஞ்சமும்மில்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ - ஹே! வீரகாளி, சாமுண்டி காளி கரும்புத் தோட்டத்திலே - மேற்கண்டவாறு பாரதி பாடியதுபோல அப்பஞ்சைப் பெண்களை பிஜித் தீவில் வெள்ளை அதிகாரிகள் கற்பிழக்கச் செய்தது உண்மை என்று அப்பெண்கள் வழிவந்தோர் அங்கு சென்ற உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தலைவர் மலேசியா இரா. ந. வீரப்பன் என்பவரிடம் தெரிவித்துள்ளனர். சங்கப் பாடல்களில்கூட புறப்பாடல்களில் மன்னர் களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மன்னர்களைப் பாடும் நிலை இருந்தது மாறியதும் ஒரு வகையில் முன்னேற்றமே.