பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 77 இளங்கோவடிகள் தன் காப்பியமான சிலப்பதிகாரத்தின் நாயகனாக மன்னரை ஏற்காமல் ஒரு வணிகன் மகனை ஏற்றி ருப்பதும் ஒரு படி முன்னேற்றமே. பல நூற்றாண்டுகளுக்கு முன் விளங்கிய ஒரு கவிஞர் எல்லா நாட்டினருக்கும் எல்லாக் காலத்தாருக்கும் பொதுவான ஒரு நூலாக எழுதியிருப்பது வியப்பாகும். அப்படி வியக்க வைப்பவர் திருவள்ளுவர். வேலொடு நின்றான் இடு என்ற துபோலும் கோலொடு நின்றான் இரவு [552] ஆட்சி செய்யக் கோலோடு நிற்கும் அரசன் குடிமக்களிடம் வலிந்து பொருள் (வரி) கேட்பது கொள்ளையடிப்பவன் வேலொடு நின்று 'இடு' என்று கேட்பது போன்றது என வரி வசூல் பற்றிய நியதியை வழங்குகிறார். என்றைக்கும் உள்ள ஆட்சியாளர்க்கு இது சரியான இடித்துரை அல்லவா? 다. சித்தர்: பக்தி இயக்க காலத்திலும் முற்போக்குச் சிந்தனை முகிழ்ந் திருப்பது தெரிகிறது. திருமந்திரப் பாடலில் திருமூலர் 'கோயிலில் படமாக உள்ள கடவுளுக்கு ஒன்று தந்தால் நடமாடும் கோயில்களான மக்களுக்கு அது பயன்படுவதில்லை. நடமாடும் கடவுள்களைத் தாங்கிய நெஞ்சத்தினரான மக்களுக்கு ஒன்று தந்தால் அது பட உருவில் (சிலையாக) உள்ள கடவுளுக்குச் சென்று சேரும்' என்ற பொருளில் படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயி நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக்கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. பாடியுள்ளார்.