பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 78 பக்தி இலக்கிய காலத்தவரான திருநாவுக்கரசர் அரசனையே எதிர்த்து 'நாமார்க்கும் குடியல்லோம்' என்று கூறி மக்களுக்கு உள்ள அரசனைக் கண்டு அஞ்சுகிற அடிமை மனப்பான்மையை உடைத்தெறிகிறார், தன் பாட்டில். சேக்கிழார் நாயன்மார்கள் வாழ்க்கையைப் பெரியபுராணமாக எழுதியபோது தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்த திருப்பாணாழ்வார் போன்றவர்களையும் போற்றிப் பாடத் தயங்கவில்லை. பக்தி இயக்க காலத்தில் ஆடவர் போலவே பெண்டிரும் உரிய இடம் பெற்றிருந்ததை காரைக்கால் அம்மையார் ஆண்டாள் மூலம் அறிகிறோம் ஆண்டாளின் பாசுரங்கள் எல்லை கடந்து தெலுங்கு நாட்டு கிருஷ்ணதேவராயரையும் ஈர்த்தன. பல கவிஞர்கள் மக்கள் இலக்கியமான நாட்டுப் பாடலின் உணர்வு ஊட்டத்தை தாக்கிக் கொண்டதால் என்றும் நிலைத்து இன்றன. அவர் தம் பாடல்கள். நாட்டுப்புறத் தாலாட்டுபோல் அமைந்த பெரியாழ்வார் பாடல்: மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனேதாலேலோ! வையம் அளந்தானேதாலேலோ! மேல் உலகைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டிராதே 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்: என்கிறது திருநாவுக்கரசரின் தேவாரம். உலகளாவிய சகோதரத்துவம் (Universal Brotherhood) assirug கம்பனிடம் இருந்தது; அது அவரது இராமாயணம் மூலம் வெளிப்படுகிறது. குகன் காட்டுவாசி (TRIEE) இனத்தவன். அவனிடம் சீதையை "இவன் உன் தோழி என்றும் இலக்குவனை' இவன் உன் தம்பி என்றும் கூறுவதும் 'குகனொடும் ஐவர் ஆனோம்: என்று மகிழ்வதும் இதை உணர்த்துகின்றன. இலட்சிய நாட்டை, இலட்சிய உலகை (Utopia) Ligot 365th ஆர்வம்தமிழ்க்கவிஞர் பலரிடம் இருந்துள்ளது. உதாரணம் கம்பரின்