பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 79 இராமாயணப் பாடல். கோசல நாட்டைக் காட்டினாலும் அது அவரின் இலட்சிய நாட்டின் பிரதிபலிப்பே வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லையோர் செறுநர் இன்மையால் உண்மை இல்லை பொய் உரை இலாமையால் ஒண்மை இல்லை பல் கேள்வி ஓங்கலால் இராமலிங்க அடிகளாரிடம் சமரச சன்மார்க்கம் எல்லா உயிர்களுக்கு மானதாக விளங்கியதால் 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று உருகிட முடிகிறது. 마 நாடக இலக்கியத்தில் மனோன்மணியத்தில் சுந்தரனார் தேசபக்திக்கனலை ஊட்டுகிறார். 'அந்தணர் வணங்கும் வேள்வித் தீயைவிட, தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது' என்று ஓரிடத்தில் பாடுகிறார். 마 நீதிபதியாய் இருந்து தமிழ்க்கவிஞராக விளங்கிய வேதநாயகனார் இலஞ்ச ஒழிப்பு பற்றி அன்றே பாடினார் 'நானே பொதுநீதி தானே செலுத்திட நல்ல வரம் அருள் கோனே இலஞ்சம் வாங்கிகள் வெட்கத்தால் உயிர்மடிக்க - நானே' தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடு வோம் - என்ற பாரதி அந்த உணவு உற்பத்திக்கு நாட்டின் அனைத்து மக்களும் உழைக்க வேண்டும் என்ற கருத்துப்பட வீணில் உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம்