பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 82 விளிக்கின்றனர். இவர் மட்டும் என்னவாம்? 21 வயது வரை இந்தப் பாட்டுக்காரர் 16 அல்லது 17 வகைத் தொழில்களை வயிற்றுப் பாட்டுக்காகச் செய்திருக்கிறார் விவசாயம், மாடுமேய்த்தல், மாட்டு வியாபாரம், மாம்பழ வியாபாரம், முறுக்கு வியாபாரம், இட்லி வியாபாரம், உப்பளத் தொழிலாளி, தேங்காய் வியாபாரம், சிற்று வியாபாரம், மீன்பிடித்தல், அரசியல், நடித்தல், நடனமாடல், இயந்திரம் ஒட்டுதல், தண்ணீர் வண்டி ஒட்டுதல், பாடுதல் ஆகிய தொழில்களை பிழைப்பாக்கிக் கொண்டிருந்தவர். இவைதாம் அவரது பள்ளிக்கூடம், பல்கலைக் கழகம் எல்லாமே! தஞ்சை மாவட்டத்து செங்கப்படுத்தான் நாடு இவரது கிராமம் சொந்தஊர் இருந்தாலும் பெயரில் இருப்பது ஒரு காலத்தில் கோட்டை இருந்த பட்டுக்கோட்டை. அந்த ஊருக்குப் புகழ் சேர்ந்தது நம் பட்டுக்கோட்டையாரால். 16 வயதினிலே பருவ ஆசைகள் வரும். அவருக்கோ பாப்புனையும் ஆசை வந்தது ஆற்றல் பிறந்தது. அது 1946 ஆம் ஆண்டு என்று கூறுகிறார், பாப்பையா. இது திரையில் வராத பாட்டு. ஆனால் பாப்பையா நம் மனத்திரையில் ஒடவிடுகிறார், பேசும் சித்திரமாக (ப.25-26) தஞ்சையில் செங்கப்படுத்தான் காடு, ஒரு சிறிய கிராமம்.... இலைகளை காற்றில் சிந்தி விளையாடும் வேப்பமரம். அதன் நிழலில் அமர்ந்தார் கவிஞர். ‘'எதிரிலோ ஏரி. அதிலே கெண்டை மீன். மகிழ்ச்சி பொறுக்க முடியாமல் திரும்ப திரும்ப குதித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாடலின் திறத்தைப் பாப்பையா காட்டுகிறார். 'துள்ளிக் குதிக்கும் கெண்டை மீனே உன்னுள் தோன்றும் இன்பத்தைக் கண்டு கொண்டேன். சரி சரி ஒடு ஓடிவிடு. என்று எச்சரிக்கும் அந்தப் பாட்டை மக்கள் கவிஞரின் முதல் பாட்டைத் தொட்டுக்காட்டும் பாணி நம் உள்ளம் நிறைகிறது. 'ஓடிப்போ! ஓடிப்போ!! கெண்டைக் குஞ்சே - கரை ஒரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே துண்டில்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத் துள்ளிக் குதிக்காதே. கெண்டைக் குஞ்சே! திரைப்படப் பாடல்கள் அல்லாமல், தொடக்க காலத்தில் இதழ்களில் அவர் எழுதிய பாடல்கள் அவர் எந்தத் திசையில்