பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 83 அடியெடுத்து வைத்துள்ளார் என்பதைக் காட்டிவிடுகின்றன. அதுதான் ஜன சக்தியில் வெளிவந்த புரட்சி நண்டு” 'நாட்டு நிலமையை நல்லாப் பாத்தது ஏற்றத்தாழ்வை ஒழிக்க வரப்பில் போட்டது துணையை புரட்சி நண்டு: மோனின் நிலத்து நீர் ஏழையின் நிலத்துக்கு வர, வரப்பில் நண்டு துளைபோட அது ஏழை நிலத்துக்குப் பாய்ந்ததைப் பாப்பையா படமாக்கிக் காட்டுகிறார். பட்டுக்கோட்டையின் புரட்சி முழக்கத்தை ஒலிபரப்புகிறார். - உறுப்பறுந்து போனாலும் உள்ளம் செருப்பறுந்து போனதற்கோ கலங்கான்சிந்திப்பான்- நெருப்பை எதிர்க்கும் அஞ்சாத எண்ணம் படைத்தாற்பின் கொதிக்கும் இந்தத் தார் குளிர்நீர்: என்று தன் செருப்பு அறுந்துபோனதைப் பற்றிக் கவிஞர் 'பேசும் படக் கட்டுரையில் குறிப்பிடுவதான செய்தியை பாப்பையா தருகிறார். அங்கேதார்ச்சாலையில் காலில் சாக்கைச்சுற்றிக் கொண்டு தார் போடுகிற தொழிலாளியைப் பார்த்திருந்த பட்டுக்கோட்டைக்கு செருப்பறுந்து போனதற்கு சிந்திக்காமல் கொதிக்கும் தார்.குளிர் நீராக தோன்றியிருக்க வேண்டும். ஒருமுறை ஜான்சன் பல்கலைக் கழகத்தில் முதல் வகுப்பில் சேர்ந்தபோது வறுமையினால் பூட்ஸ் இன்றி வெறும்காலுடன் வருவரைக் கண்ட யாரோ நண்பர் ஒரு இணைக்காலணிகளை அவருக்குத் தெரியாமல் அவர் அறையில் வைத்துவிட்டுப் போய் விடுகிறார். ஜான்சன் வந்ததும் பார்க்கிறார். பொங்குகிறது சினம். வறுமையினால் நான் வெறுமையாகி விடுவேனா? வெறுங் காலுடனாவது நடப்பேனேயன்றி பிறர் இரக்கப்பட்டுப் போட்ட பிச்சையில் நாளை ஒட்டமாட்டேன்' என்று கூறி காலணிகளை வீசி எறிந்தாராம். அது வித்வத்கர்வம்; கலைச்செருக்கு, இலக்கிய இறுமாப்பு. ஆங்கில இலக்கியத்திற்கு முதன்முதலாக அகாராதி தந்த சாமுவேல் ஜான்சனுக்கு இருந்த இறுமாப்பு நம் கவிஞரிடம் இருந்ததை 'செருப்பறுந்து போனதற்கோசிந்திப்பான்’ என்ற வரிகள் உணர்த்துகின்றன. -