பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 84 திரைப்படப் பாடல்களை வைத்துக் கவிஞரின் கொள்கையைக் கணிக்க முடியுமா என்ற கேள்விக்கு பாப்பையா, கவிஞர் கூற்றையே பதிலாகத் தந்து, தம் பார்வையை ஒட்டியிருப்பது பாராட்டத் தக்கது. 'நான் நாடகங்களுக்கென்றும் சினிமாவுக் கென்றும் எழுதியுள்ள பாடல்கள் அனைத்துமே ஒவ்வொரு காரணத்துடன் பிறந்ததாக இருக்கும்: எனும் கவிஞரின் கூற்று, அவர் திரைப்படக் கதைகளுக் கேற்ப நாயக, நாயகிகளுக்கேற்ப பாடல்களை எழுதியிருந்தாலும், ஒரு கட்டுப்பாடு இருந்தாலும், அதையும் மிஞ்சி தான் நினைத்ததை ஒரு குழலுக்குள் பாய்ச்சப்பட்ட ஒளிபோல எங்கும் பரவுகிற அளவிற்குத் திறமையாக அவரால் கொள்கையைத் திரைப்பாடலிலும் புகுத்த முடிந்தது. திரைப்படப் பாடல் என்றாலே, இசைக்கு ஏற்ப, ஓசை நயம் சிறப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கும். "இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று' என்பதுபோல இசையால் வெற்றிபெற்ற பாடல்கள் பல. இவர் பாட்டெல்லாம் இசை யமைப்பால் தான் வெற்றி பெற்றனவா? இன்றைக்கு இசை இயக்குநர்கள் தயவால்தான் பாட்டு சிறக்கும் என்றுள்ள நிலை பட்டுக்கோட்டைக்கு இருந்ததில்லை. அவர் பாடலில் பண் கட்டியம் கூறியதன்றி பண்ணின் பின்னே சென்றதில்லை எனும் திறனாய்வாளர் செம்பியன் கூற்று முற்றிலும் உண்மை. பாரதி, பாரதிதாசன் இருவரும் தம் பாடல்களை இசைத்துப் பாடியதுண்டு. மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப் படங்கள் வெற்றி பெறக் காரணம் அவர்தம் படங்களின் பாடல்கள் மக்கள் ரசனைக்குரியவையாக (Hit Songs) இருக்கும்படி பார்த்துக் கொள்வாராம். நம் கவிஞர்தன் படப்பாடல்களின் இசை நன்றாக இருக்கவேண்டும் என்பதிலே கவனம் செலுத்தியதில்லை. ஆனால் கருத்திலே கவனம் செலுத்தினார். பட்டுக்கோட்டையை பாரதி, பாவேந்தருடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து கட்டுரை, நூல்கள் வந்துவிட்டன. ஆனால் பாப்பையா அதற்கு முன்பே அவ்விருவருடன் மக்கள் கவிஞரை ஒப்பிட்டு, பகுப்பாய்வு செய்துள்ளார். நாட்டு விடுதலைக்காக பாரதி, சமுதாய விடுதலைக்காக பாவேந்தர், பொருளாதார விடுதலைக்காகப்