பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 85 பட்டுக்கோட்டை பாடியதாக பாப்பையா பகுத்துப் பார்க்கிறார். அவர்களிடம் விஞ்சி நின்ற அம்சத்தையே அவர் எடுத்துக் கொள்கிறார். பிற அம்சங்களும் அக்கவிஞர்களிடம் உண்டு. ரூசோ சொன்னான் "பிறக்கும் போது மனிதன் விலங்குகளுடன் பிறப்பதில்லை' என்று. நம் கவிஞரோ பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது - எல்லாம் இருக்கும்போத பிரிந்த குணம் இறக்கும்போது சேருது' என்ற வரிகளில் பிறந்த நிலையிலும், மாறுபடும் மனிதன் திருந்தாத மனிதன், இறுதியில் திருந்தி வாழ நினைக்கும்போது இறந்து விடுகிறான், மரணம் மறுவாய்ப்பு நல்குவதில்லை! எல்லாக் கவிஞர்களுமே ஒரு புதிய உலகத்தை (Utopian)ப் பாடாமல் விட்டதில்லை. நம் கவிஞர்கூட விதிவிலக்கல்ல. நம் கவிஞர் தன் இலட்சிய தேசத்தை 'இனிச் செல்கின்ற தேசத்தில் பேதமில்லை கொடுந்தீமை பொறாமை விரோதமில்லை' என்று அறிமுகப் படுத்துகிறார். 'அண்ணே என்னைப் போலவே பலரையும் படைச்சு இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான் ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? என்ற கேள்வியிலேயே ஏழை என்று எவரையும் கடவுள் படைத்திருக்க முடியாது; ஏழைமை இவன் மீது திணிக்கப்பட்டது. இவன் உழைப்பால் கிடைக்கிற செல்வம் எவனுக்கோ போக, சமுதாய அமைப்பு சீர்படாமல் இருப்பதால் இவன் ஏழையாய் இருக்கிறான் என்ற பதிலும் தொக்கி நிற்கிறது. அதனால்தான் படைத்தவனை நொந்து கொண்டிருக் காமல், கடவுளை நம்புவதிலும் உழைப்பை நம்பு எனக் கூறுவது போல 'சாமிக்குத் தெரியும் பூமிக்குத் தெரியும் ஏழைகள் நிலைமை - அந்தச் சாமி மறந்தாலும் பூமி தந்தடும் தகுந்த பலனை’’ என்று பாடுகிறார்.