பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 88 'இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு யாவரு மொன்றென்று கொண்டால்: என்ற பாரதி வழியில், பட்டுக்கோட்டையும் 'ஊருக்கெல்லாம் ஒரேசாமி ஒரேசாமி ஒரேநீதி ஒரேநீதி ஒரோஜாதி கேளடி கண்ணாத்தா? என்று ஒன்றே நன்று என்கிறார். 다. பாரதியையும் பட்டுக்கோட்டையையும் ஒப்பிட்டுப் பொது வுடைமை இயக்கத் தலைவர் மறைந்த ஜீவா அவர்கள் தந்த மதிப்பீடு மதிப்பு வாய்ந்தது 'தேச விடுதலையை முதன்மையாகக் கொண்டு சமூக அநீதிகளைச் சாடியவர் மகாகவி எனில் சமூக விடுதலையை முதன்மையாகக் கொண்டு தன் பாடல்கள் அனைத்திலும் மார்க்சியச் சித்தாந்தங்கள் மிளிரப் பாடியவர் நம் மக்கள் கவிஞர்' பாரதியை ஒப்பிட்டு மட்டுமல்ல, பாவேந்தர் பாரதிதாசனுடன் ஒப்பிட்டும் ஆய்வுகள் வந்துள்ளன. செம்பியன் எனும் திறனாய் வாளர் பாரதியும் பாவேந்தரும் பட்டுக்கோட்டைக்கு உந்துதல் (Inspiration) தந்தனர் எனினும், பாரதியிலிருந்து ஆத்திகத்தை நீக்கிவிட்டும் பாவேந்தரிலிருந்து திராவிட நாட்டுக் கொள்கைளை நீக்கிவிட்டும் எஞ்சுகிற அக்கவிஞர்களின் நெஞ்சங்களின் கூட்டே பட்டுக்கோட்டை என்று கருதுகிறார். 'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை' என்பார் பாவேந்தர். பட்டுக்கோட்டையோ 'ஆடைகட்டிவந்த நிலவோ...??