பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 89 என்று நிலவின் ஆடை பற்றி சிந்தித்த அழகியல் கவிஞராக விளங்குகிறார். கோவிலைக் கட்டுவது பக்தி நெறி வளர்க்க என்பது பக்தர் கொள்கை கோவிலே தேவையில்லை என்பது நாத்திகர் நிலை. ஆனால் கோவிலைப் பற்றிய பட்டுக்கோட்டையின் நிலைப்பாடு புதுமையானது; கலைப்பாரம்பரியப் பண்பாட்டுக் கூறினைப் பறை சாற்றுவது: கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே? சிற்ப வேலைக்குப் பெருமையுண்டு அதனாலே: சிற்பம், சித்திரம், இசை, நடனம் சிறக்கவேண்டும். அதற்கு நசுக்கப்பட்டுள்ள நாட்டு மக்கள் நலம்பெற வேண்டும் என்பதே பட்டுக்கோட்டை பாட்டின் நோக்கமாகும். ஆரம்பத்தில் பட்டுக்கோட்டை 'அகல்யா' எனும் பெயரில் எழுதிய கவிதையை பாவேந்தர் பாராட்ட அடக்கம் கருதி, காட்டிக் கொள்ளாமலே இருந்துள்ளார். பாரதி - பட்டுக்கோட்டை பாடல் ஒப்பீட்டுப் பட்டியல்கள், பாரதிதாசன் - பட்டுக்கோட்டை பாடல்கள் ஒப்பீட்டுப் பட்டியல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் திரைப்படத்துறை மூலம் புகழ்பெற்ற இரண்டு பெரிய கவிஞர்கள் பற்றிய ஒப்பாய்வோ அவர்கள் இருவரது பாடல்களின் ஒப்பீட்டுப் பட்டியலோ இதுவரை அதிகம் வரவில்லை. (மு. பழனி இராகுதாசன் முன்னோடியாகச் செய்துள்ளார்) பட்டுக்கோட்டையைப் போலவே கண்ணதாசன் தத்துவப் பாடல்களை திரைத்துறையில் கையாண்டு வெற்றி கண்டார். பட்டுக்கோட்டை இந்த வகையில் படையில் உள்ள முன்னோடி வீரன் (Pioneer) போன்று கண்ணதாசனுக்கு பாதை அமைத்துவிட்டுப் போய்விட்டார். பாரதிக்குக் கல்விப் பின்னணி உண்டு. பாவேந்தர் முறையாக செய்யுளியற்றப் பாடம் கேட்டவர். இருவரும் தமிழாசிரியர்களும் கூட. கண்ணதாசன் வீட்டிலேயே தாலாட்டுப் புகழ் செட்டிநாட்டுச் சூழல் மூலம் தமிழ்ப் பாடல் கேட்டவர். இதழாசிரியராக இருந்த அனுபவம் வேறு. இவையெல்லாம் இல்லாமல் திண்ணைப் பள்ளியோடு கல்வி முடித்து வாழ்க்கைக் கல்வி மட்டுமே கற்றதாலே