பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 91 குழந்தைக்கு 4கால்கள்; நடை பயின்றபின்2கால்கள், உச்சி- (தலை) வெளுக்கிறபோது நடை தாழ்ந்து ஊன்று கோலுடன் மூன்று கால்களாகக் காட்சி தருவர்; ஊருக்கு மாட்டு வண்டியில் போகையில் மாடு ரெண்டும் 8 கால்கள்; மனிதன் கால்கள் சேர்த்து ஆத 10 கால்கள்; பாடையில் போகையில் 4 பேர் 8 கால்கள் இறந்தவனின் 2 கால்கள் மேலாக என்று நமது வாழ்க்கைப் பயணத்தைக் கால்களாலேயே அளந்து காட்டும் உத்தி எளிமையாகத் தத்துவத்தைச் சொல்லும் பாணிக்கு எடுத்துக்காட்டு. திராவிட முன்னேற்றக் கழகம் தன் கொள்கைகளைப் பரப்பத் திரைப்பட சாதனத்தை (Media) முழுமையாகப் பயன்படுத்தும் அளவில் ஒரு இயக்கமாக அதன் தலைவர்களான அண்ணா, கலைஞர் மற்றும் சிலர் வசனம் எழுதினார்கள். கவிஞர்கண்ணதாசன் கவிதைகளைத் தந்தார். ஆனால் பொதுவுடமைக் கொள்கைகளின் முழக்கம் பெரும்பாலும் திரையில் கேட்க, பட்டுக்கோட்டை என்ற தனிமனிதர் தான் பாடுபடவேண்டி இருந்தது. ஆனால் பலரால், பல ஆண்டுகள் நிகழ்த்தப்பட்ட சாதனைக்கீடாக தனிமனிதன் தன் பாட்டுத் திறத்தால் ஒரு உன்னதக் கொள்கையைக் குறிப்பிட்டகால எல்லைக்குள் திரையில் முழங்கச் செய்துவிட்டுப்போனது சாதனை அல்லவா? மூளையில் இரத்த நாளம் உடைந்து இரத்தம் கட்டிப்பட்டு göli LL – elpensit eggplöst (Cerebral Hemorrhage)ustantirsi , gjšg மரணம் சம்பவித்தது, 29வது வயதில். சித்தர்கள் இவ்வளவு இளவயதில் தத்துவப் பாடல்களைப் பாடியிருப்பார்களா என்பது சந்தேகமே. இரயிலில் சிநேகமாகி, உள்ளம் உருக்கும் கதையைச் சொல்லிக் கொண்டு வருபவர் 'நான் இறங்கவேண்டிய நிலையம் வந்து விட்டது' என்று திடீரென்று இறங்கிவிட்டால் நம் நிலை எப்படி இருக்குமோ, அந்த அளவு பாதிப்பை நம் நெஞ்சில் ஏற்படுத்தி விட்டுப் போன கவிஞர், நாம் நினைத்து நினைத்து ஏங்க வைத்து விட்டுப் போனாலும், அவர்கவிதைகள் காலத்துக்கும் சிந்தனைக்கும் விருந்தாகும்.