பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் 94 பெற்றோர் தங்களுக்கு மருமகனாக வரப்போகிறவனின் உள் அந்தரங்கத்தை அறிந்துகொள்ள முடிகிறது? கணினி மற்றும் மின்னணுக் கருவிகள் வந்துவிட்டன; மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள் வந்துவிட்டன. மாசைக் கண்டுபிடிக்கும் கருவிகள் போல் மனமாசைக் கண்டுபிடிக்கும் கருவிகள் இருந்தால் எத்தனையோ அகிலாக்களின் வாழ்வு காப்பாற்றப்பட்டிருக்குமே! படித்திருக்கிறான், வேலைபார்க்கிறான் அல்லது வியாபாரம் செய்கிறான் - இப்படிப்பட்ட தகுதி எதுவும் இல்லாத நிலையிலும் ஒர் ஆடவன், தான் ஆடவனாகப் பிறந்திருப்பதையே ஒரு பெரிய தகுதியாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலை இன்றுள்ளது. அதனால்தான் வேலையில்லாத பாலசுந்தரத்தின் மனம், வேலை பார்க்கும் அகிலாவைத் திருமணம் செய்து கொள்வதை 'செளகரிய மான ஒர் ஏற்பாடாக'க் கருதுகிறது. ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்த அந்த வினாடியே அகிலா பாலசுந்தரத்திடமிருந்து விடுபட்டிருக்கலாம்; அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பெரும்பாலான பெண்களைப் போல் பிறந்த வீட்டிற்குப் போனால் வாழாவெட்டி என்று சமூகம் கேவலமாய்ப் பட்டம் சூட்டுமே என்று புகுந்த வீட்டில் கொத்தடிமையாய் இருக்க வேண்டிய நிலைமை அவளுக்கு இல்லை. வேலை பார்க்கும் அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அல்லது தன் வருவாயை நம்பியிருக்கும் கணவனிடம், 'அமிர்தத்தின் உறவை அறுத்துக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட முடியும். அப்படிச் செய்ய அகிலாசராசரிப் பெண் இல்லையே! தன் மாமியாரிடமும் அண்ணனிடமும் கூட, காலம் தாழ்த்தி மிகுந்த தயக்கத்துடன், தன் கணவனிடம் இதுபற்றிக் கேட்கக் கூடாது, தன் பெற்றோரிடம் இதுபற்றிச் சொல்லக்கூடாது' என்ற உறுதிமொழியுடன்தான் தெரிவிக்கிறாள் என்பதிலிருந்தே அவள் வழக்கத்திற்கு மாறான பெண் என்பது எளிதில் புரியும். தன் கணவன் ஏற்கெனவே குழந்தையோடுள்ள ஒரு மாதவிக்கு நாயகன் என்று தெரிந்தும் கண்ணகியாக அகிலா காலந்தள்ள நினைப்பதற்குரிய அர்த்தம் அல்லது நியாயம்தான் என்ன? கணவன் பாலசுந்தரத்திடம் பல கெட்ட குணங்கள் இருக்கலாம். எனினும், கட்டிக்கொண்டவளிடம் உண்மையை ஒப்புக்கொள்கிற மனச் சாட்சியின் உறுத்தல் இருக்கிறது. அது அவளை அனுதாபப்பட