பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 96 விலகித் தனித்தனியே வாழ்வார்கள்; அல்லது விவாகரத்து செய்து கொள்வார்கள், அல்லது விவாகரத்தின் விளிம்பு வரை போயாது, திரும்பி வருவார்கள். வழக்கத்திற்கு மாறாக ஒரு குடும்பத்தி, நடக்கிறது குறுநாவலில் ஜெயகாந்தன் அகிலாவை உலவ விட்டிருக்கிறார். அகிலாவின் நிலைபாட்டை பெண்களுக்கான பொதுவான கோட்பாடாக ஜெயகாந்தன் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது, என்றாலும் அவள் வாழ்க்கையைப் பொறுத்த மட்டிலும் அதற்கான நியாயங்களை அகிலா மூலமே சொல்லவைத்து வாசகனை ஏற்றுக்கொள்ளச் செய்துவிட முடிகிறது, ஜெயகாந்தனால். இது, அவரைப் போன்ற ஆற்றல் மிக்க படைப்பாளிகளால் மட்டுமே ஆகக் கூடியது. - படைப்பின் ஒருமைத் தன்மை, வாழ்க்கையின் அர்த்தங்களை உணர்த்தும் உன்னதம், பாத்திரங்களின் குணசித்திரம் - இவற்றின் அடிப்படையில் ஒரு நாவலை, நாம் எடைபோட முடியும் என்கிறார் 9í-offsöaj Španimisustarâ. (“Our only adequate preparation for judjinganovel evaluatively is through the analytical testing of its unity, of its characterizing qualities, and of its meaningfulness - its ability to make us more aware of the meaning of our lives” - DOROTHY VAN GHENT, The English Novel: Form and Function P.7) pollu. எடைபோடும் போது எல்லாவகையிலும் உயர்ந்து நிற்கும் நாவல் 'ஒரு குடும்பத்தில் நடக்கிறது. ஜெயகாந்தனின் வேறுசில நாவல்கள் பேசப்படும் அளவுக்கு இந்த நாவல் பேசப்படவில்லை; அதிகம் பிரபலம் ஆகவில்லை. காரணம், இதில் சர்ச்சை இல்லை. நிகழ்கால வாழ்க்கை மோதல் களினால், நெருக்கடிகளால் உருவாகும் நவீன சித்தாந்தம் எதுவும் இல்லை. எதார்த்தத்தை விட ஆத்மார்த்தமான இலட்சியமே இதில் மேலோங்கி நிற்பதால் காந்தியம்போல் இந்த நாவல் கவனிக்கப் படாமல் இருக்கிறதோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. மற்ற நாவல்களில் புதுமை உண்டு; இதில் புதுமை உடலில் பழமை உயிர்கொண்டிருக்கிறது; புதுப்பழமை நிறைந்திருக்கிறது. மற்ற நாவல்களில் ஜெயகாந்தன் இருக்கிறார்; இந்த நாவலில் ஜெயகாந்தனில் கம்பன் காட்சி அளிக்கிறான்; இளங்கோவடிகள் இரண்டறக் கலந்து நிற்கிறார்; திருவள்ளுவர் தென்படுகிறார்.