பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடற்சுமை உறவிருக்கே! என்னவோ போலிருக்கே - ஒ! இதயத்தில் வேதனைச் சூலிருக்கே! மின்னலாய் வாழ்விருக்கே - நெடு மேகமாய்ப் பொழுதெலாம் தாழ்விருக்கே| இலக்கியப் பொழிலிருக்கே - மகிழ்ந்(து) இருக்கலாம்; வயிற்றுக்குத் தொழிலிருக்கே| கலைக்கவின் தேர்இருக்கே - அதைக் காணலாம்; கண்களில் நீர்இருக்கே! மலரினில் கள்ளிருக்கே - அதை மாந்தலாம்; குத்திடும் முள்ளிருக்கே! நிலவினில் சிரிப்பிருக்கே - அதை நெருங்கலாம்; தீய்த்திடும் நெருப்பிருக்கே| துயிலினில் சுகமிருக்கே - அதைத் தொடரலாம்; எழுப்பிடும் பகலிருக்கே| உயிரினில் சிறகிருக்கே பறந்(து) ஒடலாம்; உடற்கமை உறவிருக்கே| பாரதமுழக்கம் மீரா கவிதைகள் 0 102